/indian-express-tamil/media/media_files/cWJOPptOTtbseZAkJ4p1.jpg)
பாலிவுட் நடிகை பூனம் பாண்டே
இந்தியில் ஒரு சில படங்களில் நடித்துள்ள பிரபல சமூகவலைதள நட்சத்திரமாக நடிகை பூனம் பாண்டே, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு காரணமாக மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், "இன்று காலை எங்களுக்கு கடினமான ஒன்று. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் எங்கள் அன்புக்குரிய பூனத்தை இழந்துவிட்டோம் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவளுடன் தொடர்பு கொண்ட ஒவ்வொரு உயிரினமும் தூய அன்புடனும் கருணையுடனும் சந்தித்தன. துக்கத்தின் இந்த நேரத்தில், நாங்கள் பகிர்ந்து கொண்ட அனைத்திற்கும் அவளை அன்புடன் நினைவுகூறுவோம் என்று பதிவிட்டு்ளளனர்.
பூனம் பாண்டேவின் மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரசிகர்கள் சோகத்தைவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதேபோல் இது உண்மையான தகவலா என்று ஒருசிலர் ஆராய்ந்து வரும் நிலையில், அவரது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக என்றும் விசாரித்து வருகின்றனர். சமூகவலைதளங்களின் மூலம் பிரபலமான பூனம் பாண்டே, கங்கனா ரணாவத் தொகுத்து வழங்கிய லாக் அப்பின் முதல் சீசனில் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறவில்லை என்றாலும், அவர் தனது ரசிகர் பட்டாளத்தை அதிகப்படுத்தினார். கடந்த 2020-ம் ஆண்டு சாம் பாம்பேஎன்பவரை திருமணம் செய்துகொண்ட பூனம் பாண்டே 2021-ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். சமூகவலைதளங்களில் ஆரம்பத்தில் தனது சர்ச்சைக்குரிய பதிவுகள் காரணமாக பிரபலமடைந்தபூனம் பாண்டே, 2011 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றால் இந்திய கிரிக்கெட் அணிக்காக ஆடை இல்லாமல் இருப்பதாக அறிவித்தார். ஆனால் அவர் அதை செய்யவில்லை என்றாலும், இந்த அறிவிப்பு காரணமாக பிரபலமானார்.
"நாஷா" (2013) மற்றும் "தி ஜர்னி ஆஃப் கர்மா" (2018) உள்ளிட்ட சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ள பூனம் பாண்டே 2011 இல் "பயம் காரணி: கத்ரோன் கே கிலாடி" போன்ற ரியாலிட்டி ஷோக்களின் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.