New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Rakhi-Swanth.jpg)
நடிகை ராக்கி சாவந்த்
தனக்கு விவாகரத்து கிடைக்க போகிறது பிரேக்அப் என்று கூறி மேளதாளத்துடன் நடனமாடி கொண்டாடி வருகிறார்.
நடிகை ராக்கி சாவந்த்
தனக்கு பிரேக்கப் ஆகிவிட்டது என்று கூறி பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் நடு ரோட்டில் மேளதாளத்துடன் நடனமாடிய வீடிடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாலிவுட் திரையுலகில் ஒரு சில படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்தவர் ராக்கி சாவந்த். பின்னாளில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வரும் இவர் பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுள்ளார். மேலும் குஜராத்தி மொழியில் நடத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் பங்கேற்றுள்ளார்.
இந்தி தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்துள்ள ராக்கி சாவந்த் கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு இந்தியில், உபேக்ஷா என்ற படத்தில் நடித்திருந்தார். தமிழில் என் சகியே, முத்திரை ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். சினிமா மட்டுமல்லாமல் அரசியலிலும் ஆர்வம் காட்டி வரும் ராக்கி சாவந்த், கடந்த 2019-ம் ஆண்டு ரித்தேஷ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு கருத்து வெறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிக்பாஸ் மராத்த 4நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த ராக்கி சாவந்த், தனது தாய் புற்றுநோயால் அவதிப்பட்டு வருவதாக கூறி அடில் கான் துரானி என்ற தன்னை விட 11 வயது இளையவரை திருமணம் செய்துகொண்டார். இது குறித்து கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்த ராக்கி சாவந்த், திருமணத்திற்கு பிறகு வரதட்சனை கொடுமையை அனுபவித்து வருவதாக கணவர் அடில் கான் துரானி மீது புகார் அளித்திருந்தார்.
இதனிடையே ராக்கி சாவந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தனக்கு விவாகரத்து கிடைக்க போகிறது பிரேக்அப் என்று கூறி மேளதாளத்துடள் நடனமாடி கொண்டாடி வருகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே தமிழ் சின்னத்திரை பிரபலம் ஒருவர் தன்னுடைய விவாகரத்தை கொண்டாடியது கடுமமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில் தற்போது ராக்கி சாவந்த்தின் பிரேக் அப் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.