Advertisment

ஆடையில் ஜூஸ் ஊற்றிய விமான பணிப்பெண்: கோபத்தில் முறைத்த சாரா அலி கான்; வைரல் வீடியோ!

பாலிவுட் நடிகர் சையப் அலி கானின் மகளாக இவர், 2018-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான கேதர்நாத் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

author-image
WebDesk
New Update
Sarah ali khan

சாரா அலி கான்

விமான பயணத்தின்போது விமான பணிப்பெண் தனது விலை உயர்ந்த உடையில், ஜூஸ் கொட்டியதால் கோபமான பாலிவுட் நடிகை சாரா அலி கான், வாஷ் செய்வதற்காக கழிவறை செல்லும்போது அந்த பணிப்பெண்ணை மறைத்து பார்த்துக்கொண்டே செல்லும் வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாரா அலி கான். பாலிவுட் நடிகர் சையப் அலி கானின் மகளாக இவர், 2018-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான கேதர்நாத் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து சிம்பா, கூலி நம்பர் ஒன், மர்டர் முபாராக், உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள இவர், தற்போது ஸ்கை ஃபோர்ஸ், மற்றும் ஈகிள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே சமீபத்தில் விமான பயணம் மேற்கொண்ட சாரா அலிகான், சுருள் முடி மற்றும் பெரிய வளையக் காதணிகளுடன் இளஞ்சிவப்பு நிற ஆடை அணிந்திருந்துளளார். இந்த பயணத்தின்போது,  ஒரு விமானப் பணிப்பெண் தற்செயலாக சாரா அலி கானின் விலையுயர்ந்த ஆடையில் ஒரு கிளாஸ் ஜூஸைக் கொட்டியதால் கோபமாகியுள்ளார். மேலும் ஆடையை வாஷ் செய்வதற்காக, கழிவறைக்குச் செல்வதற்கு முன் சாரா அலி கான், விமானப் பணிப்பெண்ணை முறைத்துப் பார்க்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் சாரா அவுட்ஃபிட்ஸ்பாயில் (#SaraOutfitSpill) என்ற ஹேஷ்டேக்குடன் இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் இது படப்பிடிப்புக்கான காட்சியாக இருக்கலாம் என்று கூறி வருகின்றனர். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cinema Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment