Advertisment
Presenting Partner
Desktop GIF

’கொரோனாவில் மக்களுக்கு சேவை செய்யணும்’: நர்ஸாக மாறிய பாலிவுட் நடிகை

"நர்ஸோ, நடிகையோ, எதுவாக இருந்தாலும், எங்கே இருந்தாலும், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது தான் எனது விருப்பம்."

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Shikha Malhotra

Shikha Malhotra

ஷாருக்கானின் "ஃபேன்" திரைப்படத்தில் நடித்த நடிகை, ஷிகா மல்ஹோத்ரா, மும்பை மருத்துவமனையில் ஒரு செவிலியராக பணிபுரிய தன்னார்வம் காட்டியுள்ளார். உலகமே தற்போது கோவிட் -19ஐ எதிர்த்துப் போராடி வருகிறது. இந்த வைரஸ் இதற்கு முன்னர் மனிதர்களை பாதித்ததில்லை.

Advertisment

இந்த இக்கட்டான நேரத்தில் உறவினர் திருமணம், இறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்கணுமா?. இந்த எண்களை தொடர்பு கொள்ளுங்க

”கோவிட் -19 நோயாளிகளுக்கு என்னால் உதவ முடியும் என்பதால், அவர்களுக்கு உதவ முடிவு செய்தேன்" என்று டெல்லியின் வர்தமன் மகாவீர் மருத்துவக் கல்லூரி அண்ட் சப்தர்ஜங் மருத்துவமனையில் நர்சிங் பட்டம் பெற்ற ஷிகா கூறினார். தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000-ஐ தாண்டியுள்ளது.

"நர்ஸோ, நடிகையோ, எதுவாக இருந்தாலும், எங்கே இருந்தாலும், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது தான் எனது விருப்பம். அதற்கு உங்கள் ஆசீர்வாதம் தேவை. தயவுசெய்து வீட்டில் இருங்கள். பாதுகாப்பாக இருங்கள், அரசு சொல்வதை பின்பற்றுங்கள்" என ஷிகா மல்ஹோத்ரா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

அதோடு, மருத்துவப் பட்டம் பெற்றவர்களை இந்த தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் சேருமாறும் அந்த இன்ஸ்டாகிராம் பதிவில்  கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது மும்பை, ஜோகேஸ்வரியில் உள்ள பாலாசாகேப் தாக்கரே மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார் ஷிகா.

பிப்ரவரியில் வெளியான "காஞ்ச்லி" படத்தில் நடிகர் சஞ்சய் மிஸ்ராவுடன் இணைந்து நடித்திருந்தார் ஷிகா மல்ஹோத்ரா. பிரதமர் நரேந்திர மோடி, தனது வானொலி நிகழ்ச்சியான மான் கி பாதில், கோவிட் -19 க்கு எதிரான போரில் ஈடுபடும் செவிலியர்களின் "தைரியம் மற்றும் அர்ப்பணிப்புக்கு" நன்றி தெரிவித்தார்.

"நான் இன்று ஒவ்வொரு செவிலியருக்கும் வணக்கம் செலுத்துகிறேன். நீங்கள் அனைவரும் ஒப்பிடமுடியாத அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறீர்கள். தற்செயலாக 2020-ஆம் ஆண்டை சர்வதேச செவிலியர்கள் மற்றும் மருத்துவத்தின் ஆண்டாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது" என்று பிரதமர் மோடி கூறினார்.

வீட்டில் இருந்தே போர் அடிக்குதா? வாங்க நாம இப்போ வண்டலூர் ஜூவுக்கு போவோம்…

20 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்களுக்கு ரூ .50 லட்சம் மதிப்புள்ள சுகாதார காப்பீட்டு திட்டத்தை பிரதமர் அறிவித்தார், இதனால் "இந்த போராட்டத்தில் நீங்கள் நாட்டை அதிக நம்பிக்கையுடன் வழிநடத்த முடியும்". நோயாளிகளைப் பற்றி அக்கறை கொண்டுள்ளதைப் போலவே, சுகாதார ஊழியர்களையும் பற்றி, நாடு கவலை கொண்டுள்ளது என்றும் பிரதமர் மோடி கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Coronavirus Bollywood
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment