பாலிவுட் சினிமாவின் பழம்பெரும் நடிகையும் இயக்குனருமான சிமி கரேவால் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் ஒரு பிளாக் அண்ட் வொயிட் புகைப்படத்தை வெளியிட்டு இந்த புகைப்படம் எந்த ஆண்டு எடுக்கப்பட்டது என்பதை கண்டறிய உதவுகள் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
1962-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ராஸ் கி பாட் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் சிமி கரேவால். தொடர்ந்து இந்தி மற்றும் பெங்காலி மொழி படங்களில் நடித்துள்ள சிமி கரேவால், கடைசியாக கடந்த 1988-ம் ஆண்டு மிதுன் சக்ரவர்த்தி நடிப்பில் வெளியான ருக்சட் என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார்.
தற்போது 75-வயதாகும் நடிகை சிமி கரேவால் தனது எக்ஸ் பக்கத்தில் பழைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். பல தசாப்தங்களுக்கு முன் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில், நாட்டின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் பாலிவுட் நடிகர் ஜீனத் அமானுடன் சிமி கரேவால் இருக்கிறார். இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்து சரியான நேரத்தை கூற கருத்தக்கள் பகுதியை நிரப்பி வருகின்றனர்.
சிமி கரேவால் தனது X கணக்கில் வெளியிட்டுள்ள பிளாக் அண்ட் வொயிட் படத்தில், இந்திரா காந்தி மற்றும் ஜீனத் அமானுடன் சிமி கரேவால் உள்ளிட்ட மூன்று பெண்களும் ஒன்றாகக் காணப்பட்டனர். இதில் சிமிக்கும் இந்திரா காந்திக்கும் இடையில் ஜீனத் அமர்ந்திருந்தார். அவர்கள் மூவரும் விளையாட்டு போட்டியின் மீது கவனம் செலுத்தி வருகின்றனர். ஜீனத் குட்டையான, தலைமுடியுடன் இருக்கிறார்.இந்திரா காந்தி புடவை அணிந்து கருப்பு கண்ணாடி அணிந்திருந்தார்.
படத்தைப் பகிர்ந்த சிமி, தாங்கள் மூவரும் ஒன்றாக இருக்கும் சரியான இடம் பற்றிய விவரங்களைத் தலைப்பில் தெரிவித்தார். "த்ரோபேக்! டெல்லியில் இந்திராகாந்தி முன்னிலையில் திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் எம்.பி.க்கள் கிரிக்கெட் போட்டியை பார்த்தபோது எடுக்கப்பட்டது. இது விலைமதிப்பற்ற நினைவுச்சின்னங்களில் ஒன்று. அதே சமயம் இந்த புகைப்படம் எந்த ஆண்டு.. போட்டியில் யார் வென்றது.. தெரியவில்லை. யாருக்காவது தெரியுமா?" என்று கேட்டுள்ளார்.
படத்தைப் பார்த்து ஒரு ரசிகர், "ஆஹா. அற்புதமான நினைவுகள்" என்று மற்றொருவர் எழுதினார், மூத்த நடிகையாக ஜீனத் அமன் தனது இன்ஸ்டாகிராமில் த்ரோபேக் படங்களைப் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் அவர் தனது தொழில் வாழ்க்கையில் தன்னைப் பற்றிய தவறான அறிக்கைகள் மற்றும் வதந்திகளைப் பற்றி திறந்தார். இதில் இந்தி சினிமாவில் எனது 50 ஆண்டுகளில் ஒரு புத்தகத்தை நிரப்பும் அளவுக்கு என்னைப் பற்றிய பொய்களையும் கொடூரமான அறிக்கைகளையும் நான் படித்திருக்கிறேன், கேட்டிருக்கிறேன்.
இவை ஒவ்வொன்றையும் பட்டியலிடவும் எதிர்க்கவும் எனக்கு விருப்பமில்லை, ஏனெனில் அவை அவ்வளவு தகுதியற்றவை. இப்போது நான் அத்தகைய உறுதிப்பாட்டிற்கு வழக்கமான பதில் என்னவென்பதை அறிவேன். நீங்கள் பொது மக்களின் பார்வையில் இருப்பதைத் தேர்வுசெய்தால், வதந்திகளைக் எதிர்கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“