Advertisment

இந்தியாவின் முதல் டேட்டிங் நிகழ்ச்சி... தொகுப்பாளராக சன்னி லியோன் : தமிழில் பார்ப்பது எப்படி?

இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வர மற்றொரு முக்கிய காரணம், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும், பாலிவுட்டின் பிரபல நடிகை சன்னி லியோனி தான்

author-image
WebDesk
New Update
Dating Show Sunny Leone

சன்னி லியோன்

ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ்நிகழ்ச்சியின் 15 வது சீசன் இந்த முறை தமிழில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் இதுவரை இருந்த சீசன்களில் தமிழில் ஒளிபரப்பாகவிருக்கும் முதல் சீசன் இதுவே.

Advertisment

பாலிவுட்டில் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் மிகவும் பிரபலமான, அதிக பார்வையாளார்களை கொண்ட நிகழ்ச்சி ஸ்ப்ளிட்ஸ் வில்லா”. இந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கு இளைஞர்கள் மத்தியில் பெரிய ஆதரவு இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சி இளம் வயது ஆண், பெண்களை கவரும் வகையில் அமைந்திருப்பதால், ரசிகர்கள் மத்தியில் அதீத கவனம் ஈர்த்து வருகிறது.

மேலும் இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வர மற்றொரு முக்கிய காரணம், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும், பாலிவுட்டின் பிரபல நடிகை சன்னி லியோனி தான்.. சன்னிலியோனின் உடைக்காகவும் அவரின் அழகுக்காகவும், அவரை பார்ப்பதற்காகவே இந்த நிகழ்ச்சியை காண்பவர்கள் பலர் உள்ளனர்.

இந்நிலையில்,  பிரபல டேட்டிங் நிகழ்ச்சியான ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ் 5 அடுத்த சீசனை தொகுத்து வழங்க தயாராகிவிட்டார் சன்னி லியோன். (Splitsvilla X5) ஸ்ப்ளிட்ஸ் வில்லாநிகழ்ச்சியின் 15 வது சீசனின் எக்ஸ் ஸ்க்வீஸ் மீ ப்ளீஸ்என்ற அறிமுகப்பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடலை தனது புதிய இணை தொகுப்பாளர் நடிகர் தனுஜ் விர்வானியுடன் இணைந்து சன்னி லியோன் வெளியிட்டுள்ளார்.

அல்தாஃப் ராஜா மற்றும் ஆகாசா சிங் பாடியுள்ள இந்தப் பாடல், ‘ஸ்பிளிட்ஸ்வில்லாசீசனில் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை காண்போருக்கு புரியவைக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் இந்த பாடல் ஸ்ப்ளிட்ஸ் வில்லாநிகழ்ச்சியின் 15 வது சீசன் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்றே கூறலாம். இந்த வீடியோ பாடலை தனது சமூகவலைத்தளம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சன்னி லியோன், இதற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

மேலும், ‘ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ்நிகழ்ச்சியின் 15 வது சீசன் இந்த முறை தமிழில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதுவரை ஒளிபரப்பான சீசன்களில் தமிழில் ஒளிபரப்பாகவிருக்கும் முதல் சீசன் இதுதான். எம்.டி.வி. (MTV)  ஸ்ப்ளிட்ஸ்வில்லாவின் இந்த சீசன் ஜியோ சினிமாவில் தமிழில் ஒளிபரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. இந்நிகழ்ச்சி கடந்த 2014-ம் ஆண்டு முதல் சன்னி லியோன் தொகுத்து வழங்க, ஒளிபரப்பாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

    Sunny Leone
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment