Advertisment

உண்மையான காதல் இருந்தால் இதை மட்டும் பண்ணுங்க: சன்னி லியோன் அறிவுரை!

உண்மையான காதலுக்காக காதலர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நடிகை சன்னி லியோன் ரியாலிட்டி ஷோ ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Sunny na

நடிகை சன்னி லியோன் ரியாலிட்டி ஷோ

பாலிவுட்டின் சன்னி லியோன் தொகுத்து வழங்கி வரும் ஸ்பிளிட்ஸ்வில்லா எக்ஸ் 5 ரியாலிட்டி ஷோ தற்போது தமிழிலும் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த நிகழ்ச்சி பாலிவுட் ரசிகர்களை கவர்ந்ததை போலவே தமிழ் ரசிகர்களையும் கவர முக்கிய காரணம் நடிகை சன்னி லியோன் தான். இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு எபிசோட்டிலும் காதலர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து சன்னி லியோன் டிப்ஸ் கொடுத்து வருகிறார்.

Advertisment

அந்த வகையில், அடுத்து வெளியாக உள்ள புதிய எபிசோட்டில், காதல், துரோகம் மற்றும் வெறுப்பு உச்சம் அடையும் போது, என்ன செய்ய வேண்டும் என்கிற சூப்பரான டிப்ஸை புதிய எபிசோடில் சன்னி லியோன் கூறியுள்ளார். "ஒருவர் உங்களை விட்டு பிரிய வேண்டும் என நினைத்தால், விட்டு விடுங்கள்; அவர்களை நீங்கள் உண்மையாக நேசித்தால், பிரிந்து சென்றவரும் மீண்டும் உங்களைத் தேடி வந்து உன்னை தான் அதிகம் விரும்புகிறேன் எனச் சொல்வார்என நடிகை சன்னி லியோன் ஸ்பிளிட்ஸ்வில்லா நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு காதலின் தத்துவத்தை கூறியுள்ளார்.

கடந்த வாரம் கடுமையான இரட்டை சவால்கள் முடிந்து வில்லாவிற்கு திரும்பிய போட்டியாளர்கள் கவர்ச்சியான டோம் சுற்றுக்கு தயாராக உள்ளனர். ஆனால் பளபளப்பு மற்றும் கவர்ச்சிக்கு முன், கூட்டணிகள், நண்பர்கள் மற்றும் புதிய எதிரிகளிடையே சூடான வாக்குவாதங்களால் வில்லாவில் பிரச்சனைகள் வெடித்தன. ஜாஷ்கிருதி ஜோடியை அனைவரும் அட்டாக் செய்யும் விதாமான அந்த ஜோடிக்கு வில்லாவில் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது.

Sunny Leone Sho

அதே நேரத்தில் அவர்களது போட்டியாளர்கள் பாதுகாப்பாக ஓய்வெடுக்கிறார்கள். டோம் சுற்றுக்கு யூகிக்கக்கூடியதாகத் தெரிகிறது, ஆனால் ஸ்பிளிட்ஸ்வில்லா எக்ஸ் 5 ப்ளீஸ், நிகழ்ச்சியில் வரும் திடீர் ட்விஸ்ட் நிகழ்ச்சியை புரட்டிப் போடுகிறது.

சூடான வாதங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள்:  கிங் ஆஃப் ஹார்ட்ஸ் தனுஜ் மற்றும் குயின் ஆஃப் ஹார்ட்ஸ் சன்னி லியோனால் தூண்டப்பட்ட அக்ரிதி மற்றும் அனிக்கா இடையே ஒரு உக்கிரமான வாக்குவாதத்துடன் டோம் சுற்று தொடங்குகிறது. முன்னதாக அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்த நிலையில், தற்போது எதிரிகளாக மாறியுள்ளனர்.  சுபியுடனான நட்பின் காரணமாக ஹர்ஷின் வெறுப்பை வெளிப்படுத்தும் வகையில் காஷிஷ் தேநீரைக் கொட்டினார். சுபியின் எந்த நண்பரையும் ஆதரிக்க மறுத்து, அவளுக்கு ஆதரவாக இருப்பவர்களைத் தூக்கி எறியவும் அவர் தயாராகிவிட்டார்.

இன்னொரு பக்கம் புதிய போட்டியில் சன்னி லியோன் மற்றும் தனுஜ் போட்டியாளர்களுக்கு பல ட்விஸ்ட்டுகளை கொடுத்து ஆட்டத்தை இன்னமும் சூடுபடுத்தி விட்டனர். பவர் இருக்கும் தம்பதிகள் அந்த சக்தியை வைத்து போட்டியாளர்களை காப்பாற்ற முடியாது என்கிற புதிய ட்விஸ்ட் உருவாகிறது. மேலும், வீக்கான போட்டியாளர்கள் தங்களுக்கு பதில் வேறொருவரை வில்லாவில் இருந்து வெளியேற்ற களமிறங்குவார்கள் என்று தனுஜ் போட்ட போடு நிகழ்ச்சியை அதிர வைத்துள்ளது.

Sunny Leone Sho

அதிகாரப் போராட்டங்கள் மற்றும் புதிய கூட்டணிகள்: நண்பர்கள் எதிரிகளாக மாறும்போது, ​​இந்த சுற்று எலிமினேஷன் சூழல் கட்டுப்பாட்டை மீறுகிறது மற்றும் டோம் சுற்றுக்கு ரசிகர்களுக்கு தரமான ட்ரீட்டாக அமைகிறது. டீகிலா மற்றும் அனிகேட்டியிடமிருந்து பதவி மற்றும் அதிகாரத்தை போட்டியின் முடிவில் லக்ஷய் மற்றும் அனிக்கா தட்டித் தூக்கும் விதமாக நிகழ்ச்சி செல்ல, ரசிகர்கள் உற்சாகமடைந்து விட்டனர்.

ஸ்பிளிட்ஸ்வில்லா எக்ஸ் 5 ப்ளீஸ் (MTV Splitsvilla X5: ExSqueeze Me)  நிகழ்ச்சி, தமிழில் எம்.டி.வி (MTV) மற்றும் ஜியோ சினிமா (JioCinema) -ல் ஒரே நேரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பப்படும்.

Sunny Leone
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment