600 மில்லியன் வியூஸ்… லாக் டவுன் வெற்றிக்கு உதவிய வீடியோ?!

பாலிவுட்டின் ஹாட் நடிகை ஊர்வஷி ரவ்தேலா வெளியிட்ட வீடியோ கொரோனா லாக்டவுனில் 600 மில்லியன் வியூஸ்களைத் தாண்டி பார்க்கப்பட்டுள்ளது. இது போன்ற வீடியோக்கள் லாக்டவுனில் வீட்டில் முடங்கிக் கிடப்பவர்களை வெளியே விடாமல் கட்டிப்போட்டு வைத்து லாக்டவுனை வெற்றியடைய உதவியிருக்கின்றன என்று சொல்ல வைத்துள்ளது.

By: Updated: April 29, 2020, 07:58:20 PM

பாலிவுட்டின் ஹாட் நடிகை ஊர்வஷி ரவ்தேலா வெளியிட்ட வீடியோ கொரோனா லாக்டவுனில் 600 மில்லியன் வியூஸ்களைத் தாண்டி பார்க்கப்பட்டுள்ளது. இது போன்ற வீடியோக்கள் லாக்டவுனில் வீட்டில் முடங்கிக் கிடப்பவர்களை வெளியே விடாமல் கட்டிப்போட்டு வைத்து லாக்டவுனை வெற்றியடைய உதவியிருக்கின்றன என்று சொல்ல வைத்துள்ளது.

கொரொனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ளதால், அனைவரும் வீடுகளில் முடங்கி உள்ளனர். வீடுகளில் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு மொபைல் போன்களே பொழுது போக்கு சாதனமாக உள்ளது. இந்த லாக்டவுன் காலத்தில் சமூக ஊடகங்கள்தான் மக்களின் பொழுது போக்கு களமாக உள்ளது. இதனால், சமூக ஊடகங்கள் பொழுதுபோக்கு வீடியோக்களால் நிரம்பி வழிகிறது.

கோலிவுட், பாலிவுட், டோலிவுட், மோலிவுட் என இந்திய சினிமா நடத்திரங்கள் பலரும் சமுக ஊடகங்களில் இந்த பொது முடக்க காலகட்டத்தில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.


அந்த வரிசையில் பாலிவுட்டின் ஹாட் நடிகையான ஊர்வஷிர் ரவ்தேலா பிகினியில் குளிக்கும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஊர்வஷி ரவ்தேலா வெளியிட்டுள்ள வீடியோவை 600 மில்லியன் வியூஸ்ஸைத் தாண்டி பார்க்கப்பட்டுள்ளது.

நடிகை ஊர்வஷி ரவ்தேலா தினமும் வெளியிடும் ஹாட் புகைப்படங்களுக்காகவும் திகைக்கவைக்கும் வீடியோக்களுக்காகவும் சமூக ஊடகப் பயணர்களிடையே மிகவும் விருப்பமான ஹாட் நடிகையாக திகழ்கிறார். ஊர்வஷி ரவ்தேலா பாலிவுட்டில் ரிதேஷ் தேஷ்முக் மற்றும் விவேக் ஓபராய் ஆகிய முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். பாகல்பண்டி படத்தின் மூலம் சினிமா உலகில் நன்கு அறியப்பட்டவர் ஊர்வஷி ரவ்தேலா.

தனது வீடியோவை 600 மில்லியன் வியூஸ்க்கு மேல் பார்க்கப்பட்டதற்கு ஊர்வஷி ரவ்தேலா நன்றி தெரிவித்து அவர்களுக்கு நிறைய அன்பை அனுப்புவதாக கூறியுள்ளார்.

கொரோனா லாக்டவுனில் வீட்டில் முடங்கிக் கிடப்பவர்கள் பொழுதுபோக்குவதற்கும் அவர்களை வீட்டிலேயே கட்டிப்போடுவதற்கும் இது போன்ற வீடியோக்களும் உதவியிருக்கின்றன என்று கூறப்படுகிறது.

இயக்குனர் அஜய் லோஹன் இயக்கியுள்ள ஊர்வஷி ரவ்தேலாவின் நடுத்துள்ள விர்ஜின் பானுபியா படம் ஜூன் 12-ம் தேதி வெளியாக இருந்த நிலையில், கொரோனா பொது முடக்கம் காரணமாக ரிலீஸ் தள்ளிப்போகும் என்று கருதப்படுகிறது. இந்தப் படத்தில் ஊர்வஷி ரவ்தேலாவுடன் கௌதம் குலாதி, அர்சனா புரன் சிங் ஆகியொர் நடித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Bollywood actress urvashi rautela bathing bikini hot video cross 600 million views

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X