கடைசி படப்பிடிப்பு: பாலிவுட் நடிகைக்கு தமிழ் வசனம் கற்றுக் கொடுத்த விவேக் வீடியோ

பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்டேலா, நடிகர் விவேக் மரணத்துக்கு எழுதியுள்ள இரங்கல் பதிவு ரசிகர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களின் நெஞ்சத்தை உருக்குவதாக அமைந்துள்ளது.

bollywood actress Urvashi Rautela, Urvashi Rautela condolence to actor vivek death, actor vivek, பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்டேலாவுக்கு தமிழ் வசனம் கற்றுக் கொடுத்த விவேக் வீடியோ, விவேக் மரணம், ஊர்வசி ரவ்டேலா இரங்கல், சரவணா ஸ்டோர்ஸ் சரவணன், saravanas stores woner movie heroine urvashi rautela, actor vivek teaching tamil dailogue to urvashi rautela, வைரல் வீடியோ, viral video

நடிகர் விவேக் இறப்பதற்கு முன்பு சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியுடன் நடித்த படத்தின் கடைசி படப்பிடிப்பில் அவருடன் நடித்த பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்டேலா நடிகர் விவேக் தனக்கு தமிழ் வசனம் கற்றுக்கொடுத்தை பதிவிட்டு உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா உலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன் தினம் ஏப்ரல் 17ம் தேதி அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தமிழ் சினிமா உலகில் வெறும் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் தனது நகைச்சுவை நடிப்பில் மூடநம்பிக்கைளுக்கு எதிராகவும் சமூக மாற்றத்தை ஊக்குவிக்கும் முற்போக்கு கருத்துகளையும் வலியுறுத்தி சிரிக்க வைத்தார். பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஆர்வமுள்ளவராகவும் செயல்பட்டு வந்தார். நடிகர் விவேக்கின் மறைவு திரையுலகினரை மட்டுமல்லாமல் அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிம நட்சத்திரங்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கள் தெரிவித்தனர். நடிகர் விவேக்கின் உடல் நேற்று முன் தினம் அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.

நடிகர் விவேக் இறப்பதற்கு முன்பு, சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அண்ணாச்சி நடிக்கும் புதிய படத்தில் நடித்தார். அந்த படத்தில் சரவணன் அண்ணாச்சிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்டேலா நடித்திருந்தார். இந்த படத்தில் நாயகியாக நடித்த ஊர்வசி ரவ்டேலாவுக்கு படப்பிடிப்பில் நடிகர் விவேக் தமிழ் வசனங்களை ஆங்கிலத்தில் அர்த்தம் சொல்லிக் கொடுக்கும் வீடியோவையும் புகைப்படத்தையும் பதிவிட்டு உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஊர்வசி ரவ்டேலா தனது பதிவில், “பத்மஸ்ரீ விவேக் சார், நான் உங்களை எப்போதும் மிஸ் பண்ணுகிறேன். என்னுடைய முதல் தமிழ்ப் படத்தில் உங்களைப் போன்ற சாதனையாளருடன் நடித்த அனுபவம் மறக்க முடியாத ஒன்று. உங்கள் இழப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. நீங்கள் என்னை கவனித்துக் கொண்டீர்கள். இந்த உலகத்தைக் கவனித்துக் கொண்டீர்கள். உங்கள் டைமிங் நகைச்சுவை வசனங்கள், மரங்கள் மீதான உங்கள் அன்பு… விவேக் சார் குடும்பத்திற்கும் ரசிகர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது இதயபூர்வமான இரங்கல்கள். எனது வாழ்க்கையில் மறக்க முடியாத சில நினைவுகள் உங்களுடன் இருக்கிறது. எல்லாவற்றுக்கு நன்றி சார்” என உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

சரவணன் அண்ணாச்சி உடன் நடிக்கும் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்டேலா, நடிகர் விவேக் மரணத்துக்கு எழுதியுள்ள இரங்கல் பதிவு ரசிகர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களின் நெஞ்சத்தை உருக்குவதாக அமைந்துள்ளது. நடிகர் விவேக் படப்பிடிப்பில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்டேலாவுக்கு தமிழ் வசனங்களின் அர்த்தத்தை ஆங்கிலத்தில் சொல்லும் வீடியோவை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bollywood actress urvashi rautela condolence to actor vivek death

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com