தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் பட்டம் பெற காரணமாக இருந்த முக்கியமான படம் தோல்விப்படம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? உண்மைதான். அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி இந்தியில் பெரும் வரவேற்பை பெற்று 70-களிலேயே ரூ6 கோடி வரை லாபம் பெற்றுகொடுத்த படத்தை தமிழில் ரீமேக் செய்து தோல்வியை சந்தித்தார் ரஜினிகாந்த். படம் தோல்வியானாலும் ரஜினிக்கு இந்த படம் பெரும் பலனை கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும்.
Advertisment
இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பில் கடந்த 1975-ம் ஆண்டு வெளியான படம் தீவார். சலீம் ஜாவத் எழுதிய இந்த படத்தை யாஷ் சோப்ரா இயக்கியிருந்தார். இந்தியில் அமிதாப் பச்சனுக்கு பெரும் வெற்றியையும் புகழையும் தேடித்தந்த இந்த படத்தை தயாரிப்பாளர் கே.பாலாஜி தமிழ் ரீமேக் உரிமையை வாங்கி ரஜினிகாந்தை வைத்து ரீமேக் செய்திருந்தார்.
பொதுவாக பாலிவுட்டில் வெளியாகும் அமிதாப்பின் ஹிட் படங்களை தமிழில் ரீமேக் செய்வதை வழக்கமாக வைத்திருந்த ரஜினிகாந்த் இப்போது அமிதாப்பின் தீவார் படத்தின் ரீமேக்கில் நடித்தார். அமிதாப் நடிப்பில் பாலிவுட்டில் வெளியாகி வரவேற்பை பெற்ற டான் படம் தமிழில் பில்லா என்று ரீமேக் ஆனது. ரஜினி நடிப்பில் இந்த படத்தை இயக்குனவதற்கு முன்பே .ஆர் கிருஷ்ணமூர்த்தி தீவார் படத்தின் ரீமேக்கில் ரஜினியை வைத்து இயக்கினார்.
தமிழில் தீ என்று பெயரிடப்பட்ட இந்த படத்தில் சுமன், சௌகார் ஜானகி, ஸ்ரீபிரியா, தேங்காய் சீனிவாசன், உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் வரவேற்பை பெறவில்லை என்றாலும் பின்னணி இசையில் எம்.எஸ்.வி தனது திறமையை மீண்டும் நிரூபித்திருப்பார்.
Advertisment
Advertisements
தீவார் - தீ
தொழிற்சங்க தலைவர் பேக்டரி முதலாளி பழி போட்டதால் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொள்கிறார். இதனால் அவரது மனைவி தனது பிள்ளைகளை அழைத்துக்கொண்டு சென்னை வருகிறார். பெரியவன் ஹார்பரில் வேலை பார்க்க சிறியவன் பள்ளியில் படிக்கிறான். பின்னாளில் பெரியவன் ஹார்பரில் வளர்ந்து பெரிய கடத்தல் கும்பலுக்கு தலைவன் ஆகிறான். படிப்பில் கெட்டிக்காரனான சிறியவன் படித்து போலீஸ் அதிகாரியாக மாறுகிறான். அதன்பிறகு அண்ணன் தம்பி இடையே மோதல் ஏற்படுகிறது. அடுத்து என்ன என்பதே கதை.
இந்தியில் பெரிய வசூல் வேட்டை நடத்திய இதே கதை தமிழில் பெரும் தோல்வியை சந்தித்து. தயாரிப்பாளருக்கு அசல் பணமே கஷ்டப்பட்டு தான் வந்தது என்ற தகவலும் உள்ளது. படம் தோல்வியடைந்தாலும், ரஜினிக்கு இந்த படம் ஒரு மாஸ் படமாக அமைந்தது. இந்த படத்திற்கு பின் அவர் பல ஆக்ஷன் படங்களில் நடித்தார். மேலும் அவரது சம்பளமும் அதிகாரித்தது. தீ படம் தோல்விதான என்றாலும் ரஜினிக்கு அது வெற்றிதான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“