Advertisment

இந்திய சினிமா முன்னணி நடிகர்: வசூல் மன்னன்; இந்த குழந்தை யார்னு தெரியுதா?

இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரம் ஒருவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் யார்னு தெரியுதா?

author-image
WebDesk
New Update
Shsh Rukh Khan Childhood

இந்திய சினிமாவின் முன்னணி நடச்த்திரம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் பிரபல பாலிவுட் நடிகர் ஒருவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. அந்த நடிகர் யார் என்று உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?

Advertisment

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் இவர், பல வெற்றிப்படங்களை கொடுத்து, உலகளவில் ரசிகர்கள் பலராலும் அறியப்படும் ஒரு முக்கிய இந்திய நடிகராக இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக வீழ்ச்சியை சந்தித்து வந்த பாலிவுட் சினிமாவை தனது படத்தின் மூலம் தூக்கி நிறுத்தி வசூல் சாதனை நிகழ்த்திய பெருமைக்கு சொந்தக்காரர் இந்த நடிகர்.

யார் என்று கண்டுபிடித்துவிட்டீர்களா? அந்த நடிகர் வேறு யாரும் இல்லை பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் நடிகர் ஷாருக்கான் தான். பல முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ஷாருக்கான், உயிரே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் கமல்ஹாசன் இயக்கி தயாரித்து நடித்த ஹேராம் படத்தில் ஷாருக்கான் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

Shah Rukh Khan

கடந்த சில ஆண்டுகளாக பெரிய வெற்றி இல்லாமல் தவித்து வந்த பாலிவுட் சினிமாவில் கடந்த ஆண்டு ஜவான், பதான் என 2 பெரிய வெற்றிப்படங்களை கொடுத்து ரூ1000 கோடி வசூலை குவித்த ஷாருக்கான், தற்போது தனது அடுத்த படத்தில் நடித்து வருகிறார், சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ராஜ்குமார் ஹராணி இயக்கிய டன்கி படம் வசூலில் சாதனை படைத்திருந்தது. இந்த படத்தை தொடர்ந்து ராஜ்குமார் ஹராணி இயக்கும் அடுத்த படத்திலும் ஷாருக்கான் நாயகனாக நடிக்க உள்ளனதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே தற்போது ஷாருக்கானின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் இது ஷாருக்கானா? என்று ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Shah Rukh Khan Bollywood
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment