Kareena Kapoor Khan: கரீனா கபூர் கான் தனது நடிப்பால் ரசிகர்களை குஷிப்படுத்துவதைப் போலவே, அவ்வப்போது தனது ஃபோட்டோக்களாலும் ரசிகர்கர்களை புருவம் உயர்த்த வைப்பார். கரீனாவின் படங்கள் எப்போதும் சோர்வான கண்களுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளரிக்காய் போன்றது.
Advertisment
அந்த வகையில் இந்த அழகு நடிகையின் சமீபத்திய போட்டோஷூட் ஒன்று நம் கண்ணில் பட்டது. பிரமிக்க வைக்கும் கோட்டா லெஹங்கா, கலம்காரி துப்பட்டா ஆகியவற்றில் நம்மை மூச்சடைக்க செய்கிறார். கரீனாவின் கூர்மையான கண்கள், நியூட் லிப்ஸ், அவரின் இந்த தோற்றத்தை நிறைவு செய்கிறது.
குழந்தைப் பேற்றுக்குப் பிறகு, ‘வீர் தே வெட்டிங்’ படத்தில் நடித்திருந்தார் கரீனா. இதில் சோனம் கபூர், ஸ்வாரா பாஸ்கர் மற்றும் ஷிகா தல்சானியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
தற்போது, தான் நடிக்கவிருக்கும் சில சுவாரஸ்யமான படங்களின் லிஸ்டையும் கரீனா வைத்திருக்கிறார்.
அடுத்து கரண் ஜோஹரின் ‘தக்த்’ படத்தில் நடிக்கிறார். பீரியட் ஃபிலிமான இதில் ஆலியா பட், ரன்வீர் சிங், விக்கி கெளஷசல், பூமி பெட்னேகர், அனில் கபூர் மற்றும் ஜான்வி கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
தவிர, அக்ஷய் குமார், தில்ஜித் டோசன்ஜ் மற்றும் கியாரா அத்வானி இணைந்து நடிக்கும் ‘குட் நியூஸ்’ என்ற படமும் கரீனா கபூர் கானிடம் கை வசம் உள்ளது.