ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே நடித்துள்ள பதான் படத்தில் திபிகா படுகோனே அணிந்துள்ள உடைக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து பதிவுகளை வெளியிட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான ஷாருக்கான் நடிப்பில் தற்போது வெளியீட்டுக்கு தயாராகியுள்ள படம் பதான். தீபிகா படுகோனே நாயகியாக நடித்துள்ள இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார். ஜான் ஆபிரகாம் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படம் வரும் ஜனவரி 25-ந் தேதி பிரம்மாண்டதமாக வெளியாக உள்ளது.
ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பதான் படத்தின் பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. காவி உடையில் கவர்ச்சியாக இருக்கும் தீபிகா படுகோனே ஷாருக்கானுடன் இணைந்து நடனமாடுகிறார். இந்த பாடல் வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், தீபிகா அணிந்துள்ள காவி உடை குறித்து இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தீபிகாவின் காவி உடை குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்’ரா, இந்த படத்தில் காவி உடை வேண்டுமென்றே அவமதிக்கப்பட்டுள்ளது இதனால் படத்தை தடை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இவரின் இந்த கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் வந்ததை தொடர்ந்து இணையத்தில் இது தொடர்பான காரசாரமான விவாதம் அரங்கேறி வருகிறது.
இதனிடையே அயோத்தியின் ஹனுமன் காரி மடத்தின் தலைவர் ராஜூ தாஸ், பாலிவுட், ஹாலிவுடு் சினிமா தொடர்ந்து சனாதான தர்மத்தை பகடி செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். பதான் படத்தில் தீபிகா அணிந்துள்ள காவி உடை மத உணர்வை புண்படுத்தும் விதமாக உள்ளது. இந்த பாடல் காட்சியில் காவி நிறத்தில் பிகினி அணிய வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மதஉணர்வை புண்படுத்துவது போன்று வேண்டுமென்றே எடுக்கப்பட்ட இந்த காட்சிகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மக்கள் இந்த படத்தை புறக்கணிக்க வேண்டும். என்றும் கூறியுள்ள அவர், இந்த படம் வெளியாகும் திரையரங்குகளை தீயிட்டு கொளுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதேபோல் இந்த படத்தை எடுத்தவர்களுக்கும் இதே தண்டனை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக இந்த மகாசபயைின் தேசிய தலைவர் சக்கரபாணி மகதாராஜ் கூறுகையில், பதான் படத்தில் காவியும் இந்து மதமும் அவமதிக்கப்பட்டுள்ளது. படத்தை தடை செய்ய வேண்டும். இந்த படத்திற்கு தொடர்ந்து எங்களது எதிர்ப்பை தெரிவிப்போம் என்று கூறியுள்ளார். இதனிடையே பதான் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் மத்திய பிரதேசத்தில் ஷாருக்கான் உருவ பொம்மை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
What politicians like Narottam Mishra have been striving for years, Deepika Padukone has done in 30 secs of a song. She has made saffron India’s favorite color .
— Kasturi Shankar (@KasthuriShankar) December 14, 2022
😉#pathaan #BesharamRang@deepikapadukone @iamsrk @yrf @VMVMVMVMVM #morepowertoyou pic.twitter.com/kVc1pbHUfc
இது குறித்து நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள பதிவில், நரோட்டம் மிஸ்ரா போன்ற அரசியல்வாதிகள் 30 ஆண்டுகளாக பாடுபட்டு வரும் நிலையில், தீபிகா படுகோனே 30 வினாடிகளில் ஒரு பாடல் மூலம் செய்துள்ளார். குங்குமப்பூவை இந்தியாவின் விருப்பமாக நிறமாக மாற்றி உள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil