சகோதரர் அனில் கபூர் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட போனி கபூர் தனது மகள் ஜான்வி கபூரின் ஃபாய்ப்ரண்டு ஷிகர் பஹாரியாவுனட பங்கேற்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாலிவுட் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான போனி கபூர் தற்போது அஜித் நடிப்பில் தமிழில் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை தயாரித்தார். தற்போது இந்த கூட்டணியில் 3-வதாக தயாராகியுள்ள துணிவு படம் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது. போனி கபூர் ஸ்ரீதேவி தம்பதியின் மூத்த மகள் ஜான்வி கபூர்.
தற்போது இந்தியில் நடிகத்து வரும் இவர், விரைவில் தென்னிந்திய சினிமாவில் அறிமகமான உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இதனிடையே போனி கபூரின் சகோதரரும், பிரபல நடிகருமான அனில் கபூர் பிறந்த நாள் விழா நேற்று நடந்நதது. இதில் தனது மகளுடன் பங்கேற்ற போனி கபூர் தனது மகளின் காதலலான ஷிகர் பஹாரியா தோல்மீது கைபோட்டு போஸ் கொடுத்துள்ள போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஊதா நிற குர்தா-பைஜாமாவில் இருந்த போனி, அனில் கபூரின் வீட்டின் முன் ஷிகருடன் இணைந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். இந்த படத்தில் ஷிகர் கருப்பு சட்டை மற்றும் நீல நிற டெனிம்ஸ் அணிந்திருந்தார். ஜான்வி இந்த விழாவில் வெள்ளி நிற உடையில் வந்திருந்த நிலையில், அவர் போட்டோவுக்கு தனியாத்தான் போஸ் கொடுத்துள்ளார். இவர்களுடன் போனி கபூரின் 2-வது மகள் குஷி கபூர் மற்றும் அன்சுலா கபூர் ஆகியோரும் இருந்தனர்.
அனில் கபூரின் பிறந்தநாள் விழாவில் குஷி கபூர், ஜான்வி கபூர், ஷிகர் பஹாரியா மற்றும் அன்ஷுலா கபூர் ஆகியோருடன் போனி கபூர். ஜான்வி கபூரும், ஷிகரும் சில ஆண்டுகளுக்கு முன்பு உறவில் இருந்து சமீபத்தில் இருவரும் பிரிந்ததாக தகவல்கள் வெளியானது. இதனிடையே அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஜான்வி சமீபத்தில் ஒரு குறுகிய விடுமுறைக்காக மாலத்தீவுக்கு சென்றிருந்தார், அதே பின்னணியில் ஷிகர் தனது புகைப்படங்களை வெளியிட்டதால் இருவரும் ஒன்றாகதான் சென்றிருப்பார்கள் என்று தகவல்கள் வெளியானது.
அவர்கள் இருவரும் மாலத்தீவில் ஒரே இரவில் வானத்தின் கீழ் போஸ் கொடுத்தனர் இந்த ஒற்றுமையை ரசிகர்கள் கவனித்தனர். கடந்த வாரம் டெல்லியில் நடந்த ஸ்டோர் வெளியீட்டு விழாவில் ஷிகரும் ஜான்வியுடன் இணைந்தார். நிகழ்வில் ஒரு நபருடன் அவர்கள் இருவரும் பேசுவதைக் காட்டும் வீடியோ ஆன்லைனில் வெளியானது. அதேபோல் ஜான்வியின் இன்ஸ்டாகிராம் பதிவுகளில் ஷிகர் கருத்து தெரிவிக்கத் தொடங்கினார்.
மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் சுஷில்குமார் ஷிண்டேவின் பேரன் ஷிகர் பஹாரியா. திரைப்படத் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தொகுத்து வழக்கும் காஃபி வித் கரண் 7 இல் தானும் ஜான்வியும் டேட்டிங்கில் இருப்பதாக வெளியான வதந்திகளை உறுதிப்படுத்தினார். ஜான்வி கடைசியாக போனி கபூர் தயாரித்த மிலி படத்தில் நடித்தார். இது ஒரு சர்வைவல் த்ரில்லரான இந்த படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
ஃப்ரீசரில் சிக்கிய உணவக ஊழியராக ஜான்வி நடித்துள்ளார். இந்த ஆண்டு அவரது மற்றொரு வெளியீடான குட் லக் ஜெர்ரியிலும் அவர் நடித்திருந்தார். இந்த படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட்டது. ஜான்வி தற்போது ராஜ்குமார் ராவுடன் மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடிக்கவுள்ளார்.
ஏற்கனவே வருண் தவானுடன் பவால் படப்பிடிப்பை முடித்துள்ளார். அவரது சகோதரி குஷி கபூரும் ஜோயா அக்தரின் தி ஆர்ச்சீஸ் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் நிறைவடைந்தது. இது அடுத்த ஆண்டு நெட்ஃபிளிக்ஸில் வெளியாக உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/