/indian-express-tamil/media/media_files/sunny-leone-show.jpg)
சன்னி லியோன தொகுத்து வழங்கி வரும் ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோ
எம்.டிவியில் சன்னி லியோன் தொகுத்து வழங்கும் ஸ்ப்ளிட்ஸ்வில்லா சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. சனி மற்றும் ஞாயிறுகிழமைகளில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அந்த வகையில், இந்த வாரம் காதலர்களை பிரிக்கும் வேலையை செய்யும் குறும்புக்காரியான உர்ஃபி ஜாவேத் காதலர்கள் மத்தியில் ஏகப்பட்ட டாஸ்க்குகளை கொடுத்து அவர்களை போட்டி போட வைத்துள்ளார்.
சமீபத்திய சவாலில், ஸ்ப்ளிட்ஸ்வில்லா போட்டியாளர்கள் மற்றும் அவர்களின் ‘உள்ளாடைகளுடன்’ஒருவருக்கொருவர் நேருக்கு நேர் மோதினர், நட்பு மற்றும் காதலுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் பல்வேறு சோதனைகளும் போட்டியாளர்களுக்கான ட்விஸ்ட்டுகளும் இடம்பெற்றன. இந்த வினோதமான உள்ளாடைகளை அணியும் போது வரவிருக்கும் சவாலில் அனைத்து நண்பர்களும் அவர்களுக்கான இடத்தை பிடித்தார்களா? இல்லையா என்பது தான் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
ஒரு வலுவான திருப்பத்திற்குப் பிறகு, வெற்றி சிலருக்கு கடினமாக மாறும், மற்றவர்களுக்கு உள்ளுக்குள் இருந்து வெற்றி பெற வேண்டும் என்கிற தீயை பற்ற வைக்கிறது. நாயரா, சச்சின் மற்றும் அர்பாஸ் ஆகிய மூவரும் அதுபோன்ற ஒரு கட்டத்தில் சிக்கிக் கொண்டனர். மறுபுறம், போட்டியாளர் ஆதி சற்றே கோபத்தில் இருந்தார், ஏனெனில் அவரை விளையாட விடாமல் செய்ததற்காக சிவெட் அவரை இழுத்துச் சென்றார், இது ஸ்ப்ளிட்ஸ் வில்லன்களிடையே பதட்டங்களைத் தூண்டியது.
ஒரு காலத்தில் ஆதி மற்றும் சிவெட் இருவரும் அசைக்க முடியாத காதலில் இருந்து வந்த நிலையில், தற்போது அதனை முடிவுக்கு கொண்டு வரும அளவுக்கு இருவரிடையே மோதல் வெடித்துள்ளது. அமேஹா தனது முன்னாள் காதலரின் டி-ஷர்ட்டை அணிந்தபோது தேவ் கரனின் முகம் முற்றிலுமாக வாடிப் போய் விட்டது. இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் வெடித்தது. இதற்கிடையில், பழைய பகையை மீண்டும் தூண்டும் விதமாக அனிகாவின் செயல்பாடுகள் ரசிகர்களுக்கு அவர் ஏன் லக்ஷாயுடன் பிரிந்தார் என்பதை நினைவூட்டுகிறது.
பதட்டங்கள் அதிகமாக இருப்பதால், போட்டியாளர்கள் மத்தியில் ஈகோக்கள் மற்றும் உணர்ச்சிகளின் போர்க்களமாக உள்ளது, மன்னிப்பு, எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் சிவெட் மீதான குற்றச்சாட்டுகள் போட்டியாளர்களின் உறவுகள் மற்றும் விசுவாசங்களை அவிழ்த்து விடுகின்றன. போட்டியாளர்களின் மனநிலை பதட்டமாக இருந்தபோதிலும், இதயப்பூர்வமான முறையீடுகள் மற்றும் உணர்ச்சிகரமான பிரச்சனைகள் கிளம்பிய நிலையில், ஆடியன்ஸுக்கு சூப்பர் விருந்தாக இந்த எபிசோடு அமைந்துள்ளது.
எம்டிவி ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ் 5: எக்ஸ்ஸ்கியூஸ் மீ நிகழ்ச்சி எதிர்பாராத திருப்பங்களுடன் போட்டியாளர்களின் தலைவிதியை எவ்வாறு வடிவமைக்கும் என்பதைப் பார்க்க, ஒவ்வொரு வார இறுதியிலும் இரவு 7 மணிக்கு எம்டிவி மற்றும் ஜியோ சினிமாவில் பார்த்து ரசியுங்கள்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.