scorecardresearch

பாலிவுட் பாடகி கனிகாவுக்கு கொரோனா உறுதி! தகவலை மறைத்தாரா? – புதிய சர்ச்சை

கடந்த மார்ச் 9ம் தேதி லண்டனில் இருந்து மும்பை திரும்பிய கனிகா கபூர், அதிகாரிகளிடம் இதுகுறித்து தகவல் தெரிவிக்காமல் மறைத்ததாக கூறப்படுகிறது

bollywood singer kanika kapoor corona test positive
bollywood singer kanika kapoor corona test positive

பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கொரோனா ரைவஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ள நிலையில் அவர் தகவலை மறைத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகில் இதுவரை 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். 2.50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.


இந்தியாவில் இன்று வரை 223 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால், பொது இடங்களில் மக்கள் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள், பொழுதுபோக்கு பகுதிகள் என அனைத்தும் மார்ச் 31-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.

கொரோனா அப்டேட் – கப்சிப் இலங்கை; குளோரோகுயின் அமெரிக்கா, சீரியஸ் இந்தியா

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில் வரும் 22-ம் தேதி நாடு முழுவதும் “ஜனதா ஊரடங்கு” பிறப்பிக்கப்படுகிறது. மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தநிலையில் பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கொரோனா ரைவஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 9ம் தேதி லண்டனில் இருந்து மும்பை திரும்பிய கனிகா, அதிகாரிகளிடம் இதுகுறித்து தகவல் தெரிவிக்காமல் மறைத்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, லக்னோ சென்ற கனிகா, அங்கு இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றிலும் பங்கேற்று இருக்கிறார்.

அந்த நிகழ்ச்சியில் அரசியல் பிரபலங்கள், சினிமா நடிகர், நடிகைகள் என 100 பேர் கலந்து கொண்டுள்ளனர். பாஜக மூத்த தலைவர் வசுந்தரா ராஜேவும் கலந்து கொண்டார். இதையடுத்து அவர் முன்னெச்ரிக்கையாக தன்னை தானே தனிமைப்படுத்திக் கொள்ள முடிவெடுத்துள்ளார். இதுபோலவே அவரது மகன் துஷ்யந்தும் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

இதனால் கனிகா கபூர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசியல் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் என அனைவருக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. தகவல்களை வேண்டுமென்றே மறைத்த கனிகாவை தண்டிக்க வேண்டும் என பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இது குறித்து கனிகா தனது இன்ஸ்டாவில், “கடந்த நான்கு நாட்களாக, எனக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தன. நான் என்னை சோதித்தேன், அது கோவிட் -19 க்கு சாதகமாக வந்தது. நானும் எனது குடும்பமும் இப்போது முழுமையான தனிமைப்படுத்தலில் இருக்கிறோம்,

நான் 10 நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு திரும்பி வந்தபோது சாதாரண நடைமுறைப்படி விமான நிலையத்தில் ஸ்கேன் செய்யப்பட்டேன். அறிகுறிகள் 4 நாட்களுக்கு முன்புதான் உருவாகின. இந்த கட்டத்தில், நீங்கள் அனைவரையும் சுய தனிமைப்படுத்திக்கொள்ளவும், உங்களிடம் அறிகுறிகள் இருந்தால் சோதனை செய்யவும் கேட்டுக்கொள்கிறேன். சாதாரண காய்ச்சல் மற்றும் லேசான காய்ச்சல் போன்றவற்றை நான் உணர்கிறேன். இருப்பினும், இந்த நேரத்தில் நாம் விவேகமான குடிமக்களாக இருக்க வேண்டும், நம்மைச் சுற்றியுள்ள அனைவரையும் சிந்திக்க வேண்டும். அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம் பெற வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Bollywood singer kanika kapoor corona test positive