மும்பையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் பத்மஸ்ரீ விருது பெற்ற பாடகர் சோனு நிகாம் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் பாடகர் இசையமைப்பாளர் என பன்முறை திறமை கொண்ட திரை நட்சத்திரங்களில் ஒருவர் சோனு நிகாம். சில படங்களுக்கு டப்பிங் கொடுத்துள்ள இவர், சின்னத்திரையில் தெகுப்பாளராகவும் பல நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில் சோனு நிகாமின் இசை நிகழ்ச்சி மும்பை செம்பூரில் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த சிவசேனா கட்சியின் எம்.எல்.ஏ. பிரகாஷ் பட்டர்பேக்கரின் மகன் மற்றும் மருமகன் இருவரும் சோனு நிகாமுடன் செல்பி எடுக்க கேட்டுள்ளனர். ஆனால் நிகழ்ச்சி நேரலையில் நடந்துகொண்டிருந்ததால், சோனு நிகாம் பாதுகாவலர்கள் இவர்களை தடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த எம்.எல்.ஏ.மகனுடன் வந்தவர்கள் சோனு நிகாம் மற்றும் அவரது பாதுகாவலர்கள் மீது கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சோனு நிகாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Uddhav Thackeray faction group MLA’s son attacked Sonu Nigam. Sonu Nigam is currently in hospital with few injuries pic.twitter.com/dwyDb6eJKG
— Sanatani Rudra (@visionMP_) February 20, 2023
மேலும் சோனு நிகாமுடன் இருந்த அவரது பாதுகாவலர்களும் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் மும்பை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருமத் நிலையில், சிவசேனா கட்சியில் ஷிண்டே பிரிவினர் உத்தவ் தாக்ரே பிரிவை சேர்ந்த எம்.எல்.ஏ.வின் மகன் பாடகர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/