4 ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கான் பதான் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளதை தமிழகத்தில் ரசிகர்கள் கொண்டாட தொடங்கியுள்ளனர்.
பாலிவுட் சினிமாவின் பாட்சா என்று அழைக்கப்படுபவர் ஷாருக்கான். முன்னணி நடிகைகள் மற்றும் இயக்குனர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர், கடைசியான கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ஜீரோ என்ற படத்தில் நாயகனாக நடித்திருந்தார். அதன்பிறகு லால் சிங் சத்தா, ராக்கெட்ரி உள்ளிட்ட சில படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.
இதனிடையே தற்போது 4 ஆண்டு இடைவெளிக்கு பிறகு ஷாருக்கான் பதான் என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். ஷாருக்கான் மீண்டும் திரையுலகிற்கு திரும்பியதை தமிழ்நாட்டு ரசிகர்கள் கொண்டாட தொடங்கியுள்ளனர். பாலிவுட் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் தனக்கான் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள நடிகர் ஷாருக்கான் மீண்டும் ரீ-என்டரி ஆகியுள்ள படத்தை கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள பதான் திரைப்படத்தில் ஷாருக்கான் ரா ஏஜெண்டாக நடித்துள்ளார். அவருடன் தீபிகா படுகோனே நாயகியாக நடித்துள்ள நிலையில், ஜான் ஆபிரகாம் வில்லன் ரோலில் நடித்துள்ளார். சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள இந்த படத்தை ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் சல்மான்கான் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி 25-ந் தேதி தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி என் 3 மொழிகளில் பதான் படம் வெளியாக உள்ளது. ஷாருக்கான் நடிப்பில் 4 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாவதால் பதான் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தின் தமிழ் டிரெய்லரை சமீபத்தில் நடிகர் விஜய் வெளியிட்டிருந்தார். மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற பேஷரம் ரங் பாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கான் ரீ-என்ட்ரி கொடுத்ததை கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டின் உட்லண்ட்ஸுக்கு வெளியே ஷாருக்கான் ரசிகர்கள் மாபெரும் கட்அவுட் வைத்துள்ளனர். இதன் மூலம் படம் வெளியாகும்போது வசூலில் புதிய மைல்கல்லை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பதான் படத்தின் ஓப்பனிங் ஏற்கனவே பிரம்மாஸ்திரம் படத்தை முந்திவிட்டது.
ரிலீஸுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், விடுமுறை அல்லாத ஒரு நாள் முதல் நாள் சாதனைக்கு சவால் விடும் என்பதால், பாக்ஸ் ஆபிஸில் பதான் புயலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil