அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில், இம்மாத இறுதியில் கும்பாவிஷேகம் நடைபெற உள்ள நிலையில், ராமர் கோவிலுக்கு அருகில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நிலம் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் குறித்து இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், எதிர்கட்சிகள் பாஜகவின் அரசியல் என விமர்சனம் செய்து வருகிறது. ஆனாலும், ராமர் கோவில் கும்பாவிஷேகம் குறித்து மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனிடையே, பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் அயோத்தியில் உள்ள 7-நட்சத்திர என்கிளேவ் தி சரயுவில் ப்ளாட்டை வாங்கியுள்ளார்.
இது மும்பையை தலைமையிடமாக கொண்ட தி ஹவுஸ் ஆஃப் அபிநந்தன் லோதா (HoABL) மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து தி ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, அயோத்தியில் நடிகர் அமிதாப் பச்சன் வாங்கியுள்ள 10,000 சதுர அடி இடத்தின் மதிப்பு சுமார் 14.5 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
"என் இதயத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்திருக்கும் நகரமான அயோத்தியில் உள்ள சரயுவுக்காக அபிநந்தன் லோதா மாளிகையுடன் இந்த பயணத்தைத் தொடங்க ஆவலுடன் காத்திருக்கிறேன். அயோத்தியில் காலத்தால் அழியாத ஆன்மீகம் மற்றும் கலாச்சார செழுமை உள்ளது. புவியியல் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு உணர்வுபூர்வமான தொடர்பை உருவாக்கியுள்ளது.
இது அயோத்தியின் ஆன்மாவுக்கான இதயப்பூர்வமான பயணத்தின் தொடக்கமாகும், அங்கு பாரம்பரியமும் நவீனமும் தடையின்றி இணைந்து, என்னுடன் ஆழமாக எதிரொலிக்கும் ஒரு உணர்ச்சித் திரையை உருவாக்குகிறது. இந்த இடத்தில் உலகளாவிய ஆன்மீக மூலதனத்தில் நான் எனது வீட்டைக் கட்ட ஆவலுடன் காத்திருக்கிறேன் என அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் ஜென்மபூமி கோவிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கும் அதே நாளில் ஜனவரி 22 ஆம் தேதி சரயு இது குறித்து தகவல்களை வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. பாலிவுட்டின் சூப்பர்ஸ்டார் அமிதாப் கடைசியாக 2023 இல் வெளியான கணபத் படத்தில் நடித்திருந்தார். டைகர் ஷெராஃப் மற்றும் கிருதி சனோன் ஆகியோருடன் நடித்தார். தற்போது கல்கி 2898 AD மற்றும் தி இன்டர்னின் இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார். பிகு படத்திற்கு பின் , அமிதாப் மீண்டும் தீபிகா படுகோனுடன் இந்த படத்தில் இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.