/indian-express-tamil/media/media_files/2025/07/25/tv-actress-hindi-2025-07-25-10-34-44.jpg)
சின்னத்திரையில் தான் உச்சத்தில் இருந்தபோது, நடிப்பை விட்டு வெளியேறிய இந்த நடிகை, சொந்தமாக ஒரு நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிறுவனம் இப்போது ரூ1200 கோடி மதிப்புள்ள ஒரு நிறுவனமாக வளர்ந்துள்ளது. அந்த நடிகை தான் ஆஷ்கா கோராடியா. அவர் சின்னத்திரையில் இருந்து ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக மாறியது எப்படி என்பதை விரிவாக பார்ப்போம்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
ஆஷ்கா கோராடியாவின் சின்னத்திரை பயணம்
2002-ம் ஆண்டு 'அச்சானக் 37 சால் பாத்' என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த ஆஷ்கா கோராடியா அதன் பிறகு 'பாபி' மற்றும் 'தும் பின் ஜாவூன் கஹான்' போன்ற பல சின்னத்திரை சீரியல்களில் நடித்திருந்தார், நடித்தார். 2003-ம் ஆண்டு, எக்தா கபூரின் 'குஸ்ஸும்' என்ற நிகழ்ச்சிதான் ஆஷ்காவை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது. எக்தாவின் பிரபலமான 'க்யூங்கி சாஸ் பி கபி பஹு தி' மற்றும் 'சின்னூர் தேரே நாம் கா' , 'நாகின்' போன்ற பல பிரபலமான நிகழ்ச்சிகளில் ஆஷ்கா கோராடியா பங்கேற்றிருந்தார்.
கற்பனைக் கதைகளில் தனது பெயரை நிலைநிறுத்திய பிறகு, ஆஷ்கா 'பிக் பாஸ் சீசன் 6, ஜலக் திக்லா ஜா 4, 'நாச் பலியே 8, மற்றும் 'ஃபியர் ஃபேக்டர்: கத்ரோன் கே கிலாடி 4' போன்ற பல்வேறு ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். கடைசியாக 2019-ம் ஆண்டு, 'டாயன்' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த ஆஷ்கா அதே ஆண்டு 'கிச்சன் சாம்பியன் 5' நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்றார். 20 ஆண்டுகள் மேலான நடிப்புத் துறைக்குப் பிறகு, 2021 இல் தொழில்முனைவோராக வேண்டும் என்ற தனது கனவைத் தொடர நடிப்பில் இருந்து முறையாக ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
வணிகத்திற்கு ஒரு புதிய திருப்பம்
நடிப்பிற்கு குட்பை சொல்வதற்கு முன்பே, ஆஷ்கா 2018 –ம் ஆண்டு அகமதாபாத்தில் தனது ஒப்பனைப் பிராண்டான ரெனே காஸ்மெடிக்ஸ் (Renee Cosmetics) என்ற நிறுவனத்தை தொடங்கினார். பிரியங்க் ஷா மற்றும் அஷுதோஷ் வலனி ஆகியோருடன் இணைந்து இந்த பிராண்டை நிறுவினார். பொழுதுபோக்குத் துறையில் பெற்ற தனது அனுபவம், ஒப்பனைத் துறையில் ஒரு வலுவான அடித்தளத்தை எவ்வாறு கொடுத்தது, அதை எப்படி ஒரு வணிக முயற்சியாக மாற்றினார் என்பது குறித்து லிங்க்ட்இன் (LinkedIn) பதிவில், ஆஷ்கா பதிவிட்டுள்ளார்.
அதில், பல ஆண்டுகளாக வெளிச்சத்தில் இருந்ததால், ஒப்பனை ஒரு நபரை மாற்றும் சக்தி கொண்டது என்பதை எனக்குக் கற்றுக்கொடுத்தது. இதில் இருக்கும் அதீத ஆர்வத்தின் காரணமாக நான் ஒரு வித்தியாசமான முயற்சியை நோக்கி ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்தேன். அது எனது படைப்பாற்றலையும் தொலைநோக்குப் பார்வையையும் ஒரு ஆழமான வழியில் வெளிப்படுத்த உதவியது. அதன்பிறகு தான் ரானே காஸ்மெடிக்ஸ் பிறந்தது. எனது தொழில்முனைவு உணர்வையும், எனது கலை ஆன்மாவின் சாரத்தையும் சுருக்கமாகக் கூறும் ஒரு முயற்சி என்று கூறியுள்ளார்.
ஒரு வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்குதல்
கடந்த 2018-ம் ஆண்டு ஒரு இன்டர்நெட்-ஃபர்ஸ்ட்' (internet-first) பிராண்டாக தொடங்கப்பட்ட ரெனே நிறுவனம், ரூ50 லட்சம் ஆரம்ப முதலீட்டில் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் இந்த பிராண்டின் பொருட்கள் அதனைத்தும், அமேசான், ஃபிளிப்கார்ட், நைக்கா மற்றும் மிந்த்ரா போன்ற ஆன்லைனில் மட்டுமே விற்றது. இதன் மூலம் இந்த பிராண்ட் சில்லறை விற்பனை தளங்கள் மூலம் விரைவாக அதன் டிஜிட்டல் தடத்தை விரிவுபடுத்தியது. காலப்போக்கில், இந்த பொருட்கள் ஆஃப்லைனில் கிடைக்கும் வகையில் மாற்றப்பட்டது.
அழகுசாதன பொருட்கள் விற்பனை செய்வதில் போட்டி அதிகம் இருந்தாலும், ஆரம்பத்தில் ஆன்லைனில் மட்டுமே விற்று வந்தபோதிலும், ரெனே நிறுவனம் தொடங்கப்பட்ட முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் ரூ100 கோடி வருவாயை எட்டியது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ரெனேவின் வெற்றி ஆஷ்காவின் தனிப்பட்ட நிகர சொத்து மதிப்பை பன்மடங்கு உயர்த்தியுள்ளது, இது குறித்து ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் (Financial Express) படி, 2024 இல் ரூ100 கோடி நிதியை திரட்டிய பிறகு, இந்த பிராண்டின் மதிப்பு ரூ1,200 முதல் ரூ1,400 கோடி வரை இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
23 வயதில் வீடு வாங்கிய ஆஷ்கா
ஆஷ்கா தனது தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில் இருந்தே புத்திசாலித்தனமாக முதலீடு செய்து வரும் நிலையில், தனது 16 வயதில் ஒரு நடிகையாக மாறுவதற்காக மும்பைக்கு வந்ததாகவும், அவருக்கு 23 வயதாக இருந்தபோது, தனது கனவு வீட்டைக் வாங்கியதாவும் குறிப்பிட்டுள்ளர். நான் எனது முதல் வீட்டை வாங்கியபோது, எனக்கு 23 வயது. அப்போது, ஒரு சொந்த வீடு வைத்திருப்பது ஒரு பெரிய விஷயம். திரும்பிப் பார்க்கும்போது, அது ஒரு புத்திசாலித்தனமான முதலீடாக மாறியுள்ளது, அது மதிப்பைப் பெற்றுள்ளது. மேலும், எனது சொந்த வீடு கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறியுள்ளார்.
ஆஷ்கா தனது அமெரிக்க காதலன் பிரென்ட் கோப்லுடன் 2017 இல் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் 2019 இல் கோவாவுக்கு மாறினர். அங்கு பிரென்ட் தங்கள் ஸ்டுடியோவில் யோகா கற்றுக்கொடுக்கத் தொடங்கினார். இந்த தம்பதிக்கு 2023 இல் ஒரு மகன் பிறந்தான். அன்று முதல் அவர்கள் கோவாவில் வசித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.