அஜித் படத் தயாரிப்பாளருடன் இணையும் உதயநிதி

Udhayanidhi stalin : போனி கபூர், இதற்கு முன்பாக, அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்திருந்த நிலையில், தற்போது இரண்டாவதாக இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வழங்க உள்ளது.

By: Updated: August 24, 2020, 07:12:29 AM

பாலிவுட்டில் வெற்றி பெற்ற ஆர்டிகல் 15 படம், தமிழில் ரீமேக் ஆகிறது. அருண்ராஜா காமராஜ் இயக்கத்திலான இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ளார்.

பாலிவுட் திரையுலகில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற படம் ஆர்டிகல் 15. அனுபவ் சின்ஹா இயக்கத்தில் உருவான இந்த படத்தில், ஆயுஷ்மான் குரானா, நாசர், இஷா தல்வார், மனோஜ் பாவ்வா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரீமேக்கை போனி கபூர் கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து தமிழில் யாரை வைத்து ரீமேக் பண்ணலாம் என்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ‘ஆர்டிகல் 15’ ரீமேக் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தினை போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

கவிஞர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட அருண்ராஜா காமராஜ், கனா படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் அவருக்கு இரண்டாவது படமாக அமைய உள்ளது.

போனி கபூர், இதற்கு முன்பாக, அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்திருந்த நிலையில், தற்போது இரண்டாவதாக இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வழங்க உள்ளது.

உதயநிதி ஸ்டாலின் பெயர் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் நடிக்க உள்ள மற்ற நடிகர், நடிகையர் குறித்த விபரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க – Udhayanidhi Stalin to star in Tamil remake of Article 15

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Bollywood udhayanidhi stalin boney kapoor article 15 arunraja kamaraj udhay stalin

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X