Advertisment

'ஸ்ரீதேவி மரணத்திற்கு பிறகு துபாயில் என்னிடம் 24 மணி நேரம் விசாரணை': மனம் திறந்த போனி கபூர்

ஸ்ரீதேவியின் மரணம் குறித்து தன்னிடம் துபாயில் 48 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதும் அவரது கணவரும் தயாரிப்பாளருமான போனி கபூர் கூறியள்ளார்

author-image
WebDesk
New Update
boney Kaport Sridevi

ஸ்ரீதேவிக்கும் போனி கபூருக்கும் இரு மகள்கள் உள்ளனர்

ஆங்கிலத்தில் படிக்க...

Advertisment

தனது மனைவியும் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையுமான ஸ்ரீதேவியின் மரணம் குறித்து இதுவரை மௌனம் காத்து வந்த தயாரிப்பாளர் போனி கபூர் தற்போது இது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். 

தமிழகத்தில் பிறந்து பின்னாளில் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்தவர் ஸ்ரீதேவி. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், தொடர்ந்த ரஜினிகாந்த் கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் கால் பதித்த ஸ்ரீதேவி அங்கேயும் பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்த ஸ்ரீதேவி கடந்த 1996-ம் ஆண்டு தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என்ற இரு மகள்கள் உள்ளனர். இதனிடையே கடந்த 2018-ம் ஆண்டு துபாயில் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்ரீதேவி, ஹோட்டல் அறையின் பாத் டேப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது மரணம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஸ்ரீதேவி மரணத்திற்கு பின் அவரது இறப்பு குறித்து இதுவரை எந்த ஒரு தகவல்களையும் பகிர்ந்துகொள்ளாத அவரது கணவர் போனி கபூர், தற்போது இது குறித்து பேசியுள்ளார். இதில்,ஸ்ரீதேவி அடிக்கடி உப்பு சேர்க்காத மிகக் கண்டிப்பான உணவு முறைகளை கடைப்பிடிப்பதாகவும், இதனால் அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோன்ற அனுபவத்தை நடிகர் நாகார்ஜுனா கூறியதாகவும், ஸ்ரீதேவிக்கு மயக்கம் ஏற்பட்டதால் பல்லை இழந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

இது குறித்து தயாரிப்பாளர் போனி கபூர், சமீபத்தில் அளித்த பேட்டியில், “இது இயற்கையான மரணம் அல்ல; அது ஒரு தற்செயலான மரணம்.விசாரணையின் போது நான் கிட்டத்தட்ட 24 - 48 மணிநேரம் இந்த மரத்தை பற்றியே பேசிக்கொண்டிருந்ததால், மீண்டும் அதைப் பற்றி பேச வேண்டாம் என்று முடிவு செய்தேன். உண்மையில், இந்திய ஊடகங்களில் இருந்து அதிக அழுத்தம் இருந்ததால் நாங்கள் இதை கடந்து செல்ல வேண்டியிருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த மரணத்தில் விபரீதமாக எதுவும் நடைபெற வில்லை என்று அதிகாரிகள்,  கண்டறிந்தனர். அதன்பிறகு உண்மை கண்டறிதல் சோதனைகள் உட்பட அனைத்து சோதனைகளையும் நான் கடந்து வந்தேன். அதன் பின்னர், இந்த மரணம் தற்செயலானது என்று தெளிவாக அறிக்கை வந்தது என்று கூறியுள்ளார்.

மேலும் ஸ்ரீதேவி இறக்கும் சமயத்திலும் டயட்டில் இருந்ததாகக் கூறிய போனி, “அவர் அடிக்கடி பட்டினியாக இருப்பார். அழகாக இருக்க வேண்டும் என்று விரும்பிய ஸ்ரீதேவி கடைசிவரை நல்ல நிலையில் இருப்பதை உறுதிசெய்ய விரும்பினார். அதனால் திரையில் அவள் அழகாக இருக்கிறாள். எனக்கு திருமணம் ஆனதில் இருந்து, அவளுக்கு இரண்டு முறை சுயநினைவு இல்லாமல் இருந்துள்ளது. குறைந்த ரத்த அழுத்த பிரச்சினை இருப்பதாக டாக்டர் சொல்லிக்கொண்டே இருந்தார்.

ஒருமுறை படப்பிடிப்பின் போது குளியலறையில் ஸ்ரீதேவி மயங்கி விழுந்தபோது படத்தின் நாயகன் நாகார்ஜுனா இதே போன்ற கூறியதாக தெரிவித்துள்ள போனி கபூர்இது துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ஸ்ரீதேவி இறந்தபோது. ஆறுதல் கூறுவதற்காக வீட்டிற்கு வந்த நாகார்ஜுனா அவருடன் நடித்த ஒரு திரைப்படத்தின் போது அவர் மீண்டும் டயட்டில் இருந்ததாகவும், அதனால் தான் குளியலறையில் விழுந்து பல் உடைந்ததாகவும் அவர் என்னிடம் கூறினார்.

அவர்கள் திருமணம் செய்துகொண்ட பிறகு, கடுமையான உணவுமுறைகளைப் பின்பற்றும் பழக்கத்தைப் பற்றி தனக்குத் தெரியும் விளக்கியுள்ள போனி கபூர், இரவு உணவின் போது கூட, உப்பு இல்லாத உணவுகளை உணவுகளை தான் விரும்பி சாப்பிடுவார். இதையெல்லாம் அவர் பெரிதான எடுத்துக்கொள்ளவில்லை. அவரது மரண சம்பவம் நடக்கும் வரை இது மிகவும் தீவிரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்று போனி கபூர் மனம் திறந்து பேசியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sridevi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment