பாபு
அர்ஜுன் கபூர் - மலைகா அரோரா இடையிலான உறவு குறித்து பாலிவுட் பக்கம் பக்கமாக பேசி வருகிறது. சல்மான் கான் நேரடியாக பாதிக்கப்படும் விஷயம் என்பதால், பொருளாதாரரீதியாகவும் இந்த உறவு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
மலைகா அரோரா பிரபல நடிகை. 18 வருடங்களுக்கு முன் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை மலைகா திருமணம் செய்து கொண்டார். 18 வருட இல்லற வாழ்க்கைக்குப் பிறகு இருவரும் பிரிவது என முடிவெடுத்து விவாகரத்துக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். சகோதரனின் இல்லற வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவு சல்மான் கானை கடுமையாக பாதித்திருக்கிறது. அவர் ஒரு குடும்பப் பறவை.
மலைகா அரோராவுக்கும் அர்ஜுன் கபூருக்கும் இடையில் ஏற்பட்ட நெருக்கமே விவகாரத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. அர்ஜுன் கபூர், போனி கபூரின் முதல் மனைவிக்கு பிறந்தவர், நடிகர். இந்த உறவு அனைவரையும்விட போனி கபூரை பதட்டமடைய வைத்துள்ளது.
போனி கபூர் தனது இரண்டாவது மனைவி ஸ்ரீதேவி, மகள் ஜான்வியுடன்...
போனி கபூர் பண நெருக்கடியில் இருந்தவேளை 2005 இல் அவருக்காக சல்மான் கான், ’நோ என்ட்ரி’ படத்தில் நடித்துக் கொடுத்தார். போனி கபூரை நெருக்கடியிலிருந்து அப்படம் காப்பாற்றியது. சல்மான் கானை வைத்து ’நோ என்ட்ரி 2’, ’வான்டட் 2’ படங்களை போனி கபூர் தயாரிக்க திட்டமிட்டிருந்த நேரம், மகனின் தகாத உறவால் அவ்விரு வாய்ப்புகளையும் சல்மான் கான் மறுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது பணரீதியாக போனி கபூருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாவது, சல்மான் கானை பகைத்துக் கொண்டு பாலிவுட்டில் ஒருவர் காலூன்றி நிற்பது சுலபமில்லை. சல்மான் கான் நினைத்தால் அர்ஜுன் கபூருக்கு படமே இல்லாமல் செய்து, பீல்டில் இருந்தே துரத்த முடியும். இது போனி கபூரின் இன்னொருவகையான கவலை. அர்ஜுன் கபூரை வைத்து படம் பண்ணக் கூடாது என்று சல்மான் கான் யாரையும் எச்சரிக்கவில்லை. ஆனால், அர்ஜுன் கபூரை நடிக்க வைத்தால் சல்மானின் கோபத்துக்கு ஆளாக நேரிடுமோ என்று பலரும் அர்ஜுன் கபூரை தவிர்க்கிறார்கள். பாலிவுட்டில் இது அனைவருக்குமே தெரிந்திருக்கிறது.
அர்ஜூன் கபூர்
அர்ஜுன் கபூருக்கு வயது 33. மலைகா அரோராவுக்கு 44. சுமார் பதினொரு வருட இடைவெளி. இது காதல் அல்ல வெறும் காமம் என்பதே அனைவரது கருத்தும். நிலைமை கைமீறிப் போவதை அறிந்த பிறகு அர்ஜுன் கபூரும், மலைகாவும் ஒன்றாக சுற்றுவதை தவிர்த்திருக்கிறார்கள். சமீபத்தில் நேகா துபியாவின் டாக் ஷோவில் கலந்து கொண்ட மலைகா, அர்ஜுன் கபூருடனான தொடர்பு குறித்த கேள்விக்கு ரப்பிஷ் என்று பதிலளித்தார். யாருடனும் தற்போது எந்த ரிலேஷன்ஷிப்பும் இல்லை. தனியாகவே இருக்கிறேன் என அவர் கூறியது, இந்த விவகாரத்தில் இருந்து வந்த சூட்டை சற்றே தணித்திருக்கிறது.
அர்ஜுன் கபூருக்கும் நிலைமை புரிய ஆரம்பித்திருக்கிறது. அவருக்கும் சல்மான் கானின் சகோதரிகள் அர்பிதா கான் மற்றும் அல்விரா அக்னிகோத்ரிக்கும் நல்ல நட்பு உள்ளது. அவர்கள் மூலமாக சல்மான் கானை சமாதானப்படுத்த அர்ஜுன் கபூர் முயல்வதாக மும்பை ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அர்ஜுன் கபூர் சல்மான் கானை நேரடியாகப் பார்ப்பதை கவனமாக தவிர்த்து வருகிறார். சல்மான் கான் இருக்கும் பக்கமே வருவதில்லை. நேரில் பார்த்தால் சல்மான் கானின் கோபம் தனது மூக்கை உடைக்குமா இல்லை பல்லை பெயர்க்குமா என்ற பயம் அர்ஜுன் கபூருக்கு உள்ளது.
இந்த பயம், எச்சரிக்கையை தாண்டி அர்ஜுன் - மலைகா உறவு தொடரவும் வாய்ப்பு உள்ளது. காதலுக்கு கண்ணுதான் இல்லை. காமத்துக்கு எதுவுமேயில்லை.