Bottle Cap Challenge: சமூக வலைதளங்களில் சீசனுக்கு ஏற்றவாறு ஏதாவது ஒரு ‘சேலஞ்ச்’ டிரெண்டிங்கில் இருக்கும். இதற்கு முன் ‘ஐஸ் பக்கெட் சேலங்ஞ்’, ’ஃபிட்னெஸ் சேலஞ்ச்’, ‘ப்ளூவேல் சேலஞ்ச்’ என பல சேலஞ்சுகள் நெட்டிசன்களின் கவனம் ஈர்த்தன.
இந்நிலையில் தற்போது, ‘பாட்டில் கேப் சேலஞ்ச்’ என்ற ஒன்று டிரெண்டாகி வருகிறது. கடந்தவாரம் கஜகஸ்தானைச் சேர்ந்த தற்காப்பு கலை வீரர் பராபி டாவ்லட்சின் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் தண்ணீர் பாட்டிலை தன் காலால் பின்புறம் உதைத்து, பாட்டிலின் மேல் மூடியை அகற்றுவார். அப்போது பாட்டிலின் மூடி தனியாக சுழன்று சுழன்று தெறிக்கும். இந்த வீடியோவை பதிவிட்ட அவர், இது போல் உங்களால் செய்ய முடியுமா என சவால் விடுத்திருந்தார்.
View this post on Instagram
#BottleCapChallenge By Arjun Sarja.Check Out. #BottleCapChallenge #Fitness #ArjunSarja #FitIndia
இதைத் தொடர்ந்து ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ஆகியோர் இந்த சவாலை செய்து முடித்து, அந்த வீடியோவை தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது நடிகர் அர்ஜூனும் இந்த சவாலை செய்து முடித்திருக்கிறார். தன்னுடைய வலது காலால் பின்புறம் எட்டி உதைத்து பாட்டிலை ‘அலேக்காக’ திறக்கிறார் அர்ஜூன். ஆனால் பாட்டிலுக்கோ எந்த சேதாரமும் ஏற்படாமல் அப்படியே நிற்கிறது. தற்போது இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.