/indian-express-tamil/media/media_files/2025/09/26/shivaji-2025-09-26-19-09-58.jpg)
ஒரே கதையில் உருவான 4 படங்கள்; 33 ஆண்டுகளாக இந்திய மக்களை அழ வைக்கும் காவியம்: சிவாஜி நடிப்பில் வெளியான இந்த படம் தெரியுமா?
பாலிவுட்டில் வெளியான ‘மெஹர்பான்’, ’அவதார்’, ‘ஸ்வர்க்’ மற்றும் ‘பாக்பன்’ படங்கள் ஒரே மாதிரியான கதைக்களத்தை கொண்டிருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படமாகும். இந்த நான்கு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த படங்களானது புகழ்பெற்ற எழுத்தாளர் ஆஷாபூர்ணா தேவி எழுதிய ’ஜோக் பியோக்’ என்னும் நாவலை தழுவி எடுக்கப்பட்டதாகும். இந்த நாவல் ‘கூட்டல் மற்றும் கழித்தல்’ என்று மொழிபெயர்க்கப்பட்டது. கடந்த
1967- ஆண்டு வெளியான ‘மெஹர்பான்’ திரைப்படத்தில் அசோக் குமார், சுனில் தத், மெஹ்மூத், சசிகலா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
பங்கு சந்தை வீழ்ச்சியினால் நிதி பிரச்சனையில் தத்தளிக்கும் பணக்கார தொழிலதிபராக அசோக் குமார் நடித்துள்ளார். நிதிப்பிரச்சனையால் அவரது சொந்த மகன் கூட அவரை கைவிடுகிறார். இதனால் கவலையடைந்த அசோக் குமார் இறுதியில் மாரடைப்பால் இறந்துவிடுகிறார். மேலும் அவரது விசுவாசமான மருமகனாக நடிக்கும் சுனில் தத், இறுதி வரை அவருக்குப் பக்கபலமாக இருக்கிறார்.
இதையடுத்து 1983-ஆம் ‘மெஹர்பான்’ கதையால் ஈர்க்கப்பட்டு இயக்குநர் மோகன் குமார் ‘அவதார்’ திரைப்படத்தை வெளியிட்டார். இதில் ராஜேஷ் கன்னா மற்றும் ஷபானா ஆஸ்மி நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஆரம்பத்தில் ‘ராதா’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. பின்னர் சில காரணங்களால் ‘அவதார்’ என்று மாற்றப்பட்டது. ‘அவதார்’ திரைப்படம் நடிகர் ராஜேஷ் கன்னாவின் சினிமா கேரியரில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.
’மெஹர்பான்’ திரைப்படத்தினால் மீண்டும் ஈர்க்கப்பட்டு கடந்த 1990-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஸ்வர்க்’. டேவிட் தவான் இயக்கிய இந்த படத்தில் ராஜேஷ் கன்னா, கோவிந்தா, ஜூஹி சாவ்லா, பரேஷ் ராவல் மற்றும் மந்தாகினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
நந்து ஜி. டோலானி தயாரித்த ’ஸ்வர்க்’ திரைப்படம் மற்றொரு உணர்ச்சிகரமான வெற்றிப் படமாகும். கோவிந்தா மற்றும் ராஜேஷ் கன்னா இடையேயான காட்சிகள் பார்வையாளர்களை கண்ணீரில் ஆழ்த்தியது. இப்படமும் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
தொடர்ந்து, இதே கதைக்களத்தில் கடந்த 2003-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’பாக்பன்’. ரவி சோப்ரா இயக்கிய இந்த படத்தில் அமிதாப் பச்சன், ஹேமா மாலினி, சல்மான்கான் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
ரூ.10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ’பாக்பன்’ திரைப்படம் உலகளவில் ரூ.43 கோடிக்கு மேல் வசூலித்து, அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாகவும், உணர்ச்சிபூர்வமான குடும்ப திரைப்படமாகவும் அமைந்தது.
’அவதார்’ திரைப்படம் தமிழில் வெளியான சிவாஜி கணேசனின் ’வாழ்க்கை’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.