/tamil-ie/media/media_files/uploads/2019/09/bruna-abdullah-birth-story.jpg)
bruna abdullah birth story
Bruna Abdullah's Birth Story: கடந்த மாதம் தனது முதல் குழந்தையை பிரசவித்த புருனா அப்துல்லா, பிரசவம் குறித்த தனது அனுபவத்தை இப்போது “மை பர்த் ஸ்டோரி” என்ற தலைப்பில் பகிர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராமில், மருந்து மாத்திரை இல்லாமல் குழந்தைப் பெற்றுக் கொள்ள விரும்பியதால், ஒரு தாயாக ’வாட்டர் பர்த்தை’ தான் எவ்வாறு தேர்ந்தெடுத்தேன் என்பதை நீண்ட பதிவாக வெலியிட்டுள்ளார் ப்ரூனா.
”நான் ஒரு சூப்பர் ஹீரோவைப் போல உணர்கிறேன், யாராலும் வெல்ல முடியாதவள், இப்போது என்னால் எதையும் செய்ய முடியும் என நினைக்கிறேன்.. என் குழந்தையின் வருகைக்காக முழுமையாக கட்டுப்பாட்டில் இருப்பது, விழித்திருப்பது எனக்கு முக்கியம். இயற்கை அதன் வேலையைச் செய்யட்டும் என நான் விரும்பினேன்! இது மேஜிக், நான் மிகவும் வலிமையானவன் என்று யோசிக்க வேண்டியிருந்தது…” என்றும் புரூனா தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மும்பையில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி புருனா அப்துல்லா - அலன் ஃப்ரேசர் தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தற்போது இன்ஸ்டாகிராம் கணக்கில் புதிய வரவின் படத்தைப் பகிர்ந்துள்ள ப்ரூனா, தங்களின் குழந்தைக்கு ‘இசபெல்லா’ எனப் பெயரிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ப்ரூனா அப்துல்லாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் பின்வருமாறு...
data-instgrm-version="12">
"மை பர்த் ஸ்டோரி... நான் கர்ப்பமாக இருப்பதற்கு முன்பே, நான் தண்ணீரில் குழந்தை பெற்றுக் கொள்வேன் என்று எனக்குத் தெரியும்! என் குழந்தையின் பிறப்பு முடிந்தவரை மென்மையாகவும், எந்த மருந்துகளும் இல்லாமலும் இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். மருத்துவமனையில் அவர்கள் எனக்குக் கொடுக்கும் அனைத்து மருந்துகளின் பக்க விளைவுகளையும் நான் சமாளிக்க வேண்டும் என்பதை நான் வெறுத்தேன்.
என் குழந்தை வரும் வரை காத்திருக்க, ஒரு அமைதியான மற்றும் இனிமையான சூழலை முன்கூட்டியே நான் கற்பனை செய்தேன். என்னை ஃபீல் குட்டாக உணரச் செய்யும் நபர்களால் மட்டுமே சூழப்பட்டேன், அந்த தருணத்தில் எனக்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் ஏற்பட்டது.
அதையெல்லாம் பெற்றது என் அதிஷ்டம். நான் என் குழந்தையை ஒரு வார்மான ஸ்விம்மிங் பூலில் பெற்றெடுத்தேன். அங்கு என் கணவர், என் அம்மா, என் மருத்துவர் என்னுடன் இருந்தார்கள்.
அந்த நாளுக்காக நான் என்னை தயார் செய்தேன். தவறாமல் ஒர்க் அவுட் செய்தேன், மிகவும் சீரான உணவை சாப்பிட்டேன், ஒவ்வொரு விவரத்தையும் தியானித்து காட்சிப்படுத்தினேன்.
நான் என் குழந்தையை சனிக்கிழமையன்று பிரசவிக்க விரும்பினேன், 4 மணி நேரத்திற்கு லேபர் பெயின் இருக்கக்கூடாது என்று விரும்பினேன், என் குழந்தையை குளத்தில் பிரசவிக்க விரும்பினேன், அதை மருந்தில்லாமல் செய்ய விரும்பினேன்! நான் நினைத்த எல்லாம் எனக்குக் கிடைத்தது!
இது வலியற்றதாக இருக்க வேண்டும் என்றும் நான் நினைத்தேன். ???? ஆனால் அது உண்மையில் நடக்கவில்லை!! நான் ஒரு சூப்பர் ஹீரோவைப் போல உணர்கிறேன், யாராலும் வெல்ல முடியாதவள், இப்போது என்னால் எதையும் செய்ய முடியும் என நினைக்கிறேன்.. என் குழந்தையின் வருகைக்காக முழுமையாக கட்டுப்பாட்டில் இருப்பது, விழித்திருப்பது எனக்கு முக்கியம். இயற்கை அதன் வேலையைச் செய்யட்டும் என நான் விரும்பினேன்! இது மேஜிக், நான் மிகவும் வலிமையானவன் என்று யோசிக்க வேண்டியிருந்தது.
எல்லாவற்றையும் மிகவும் தீவிரத்துடன் உணர்ந்தேன். பின்னர் என்னால் உணர முடிந்த ஒரே விஷயம் அன்பும் தூய மகிழ்ச்சியும் தான்! வலி மறைந்து விட்டது, நான் சில நிமிடங்களில் குணமடைந்தேன், முதல் நிமிடத்திலிருந்தே அவளை ரசிக்க முடிந்தது!
அமைதியான மற்றும் அழகான அவள் விழித்துக் கொண்டாள்!
அவள் தான் எனக்கு எல்லாமே!" என்று தன் பிரசவம் குறித்து உருக்கமாக தெரிவித்துள்ளார் பிரேசிலை தாய்நாடாகக் கொண்ட இந்த பாலிவுட் நடிகை.
'ஐ ஹேட் லவ் ஸ்டோரிஸ்' மற்றும் 'கிராண்ட் மஸ்தி’ போன்ற படங்களில் நடித்துள்ள புருனா அப்துல்லா, இந்த ஆண்டு மே மாதம் தாய்லாந்தில் தனது பாய் பிரெண்ட் ஆலன் ஃப்ரேசரை மணந்தது குறிப்பிடத்தக்கது. அதோடு தன் மகளின் படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ப்ரூனா, “எங்கள் குடும்பத்தின் புதிய உறுப்பினரான இசபெல்லாவை அறிமுகப்படுத்துவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன். அவர் ஆகஸ்ட் 31-ம் தேதி மும்பையில் பிறந்தார்! நாங்கள் நன்றாக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.