Advertisment

முகேஷ் அம்பானி வீட்டில் விநாயகர் சதூர்த்தி : பாரம்பரிய உடையில் பங்கேற்ற பிரபலங்கள்

இந்திய முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானி குடும்பத்தின் விநாயகர் சதூர்த்தி திருவிழா அதிக கவனம் பெற்றுள்ளது

author-image
WebDesk
New Update
Mukesh ambani

முகேஷ் அம்பானி வீட்டு விநாயகர் சதூர்த்தி நிகழ்ச்சி

நாடு முழுவதும் விநாயகர் சதூர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டு விநாயகர் சதூர்த்தி நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் கலந்துகொண்ட சிறப்பித்தது கவனம் ஈர்த்து வருகிறது.

Advertisment

உலக பணக்காரர்களில் முன்னிலையில் இருப்பவரும் ரிலைன்ஸ் குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி மும்பையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது 27 மாடிகள் கொண்ட அன்டிலியா இல்லம் குறித்து அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த இல்லத்தில் நீச்சல் குளம், தியேட்டர், ஹலிக்காப்டர் நிறுத்து இடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளது.

Mukesh ambani

அதேபோல் முகேஷ் அம்பானி ஒவ்வொரு பண்டிகை நாட்களையும் தனது குடும்பத்துடன் சிறப்பாக கொண்டாடப்படும் செய்திகள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது முகேஷ் அம்பானி குடும்பத்தின் விநாயகர் சதூர்த்தி திருவிழா அதிக கவனம் பெற்றுள்ளது. இந்த விழாவில், இந்தி சினிமா விளையாட்டு அரசியல் உள்ளிட்ட துறைகளின் முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.

முகேஷ்அம்பானி வீட்டு விநாயகர் சதூர்த்தி விழாவில், பாலிவுட் சினிமாவில் இருந்து "ஷாரூக்கான், ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, அலியா பட், இயக்குநர் அயன் முகர்ஜி, ஐஸ்வர்யா ராய், சல்மான் கான், கியாரா அத்வானி, சித்தார்த் மல்கோத்ரா, விக்கி கௌஷல், அஜய் தேவ்கன், ரோகித் ஷெட்டி, ஷ்ரத்தா கபூர், மௌனி ராய், திஷா பதானி, அனில் கபூர், ஹேமமாலினி, அனன்யா பாண்டே, ராஷ்மிகா மந்தனா, ரேகா, உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.

Mukesh ambani

அதேபோல், விளையாட்டு துறையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், இந்திய அணி வீரர் கே.எல்.ராகுல், தமிழ் சினிமாவில் இருந்து இயக்குநர் அட்லி - ப்ரியா, விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஆகியோர் கலந்துகொண்ட நிலையில், இவர்கள் அனைவருமே பாரம்பரிய உடையுடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vinayagar Chathurthi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment