World Mental Health Day 2022: இன்றைய காலக்கட்டத்தில் நீரிழிவு நோய் பாதிப்புகள் மக்கள் மத்தியில் கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகரித்து காணப்படுகின்றன. இந்த நிலையில், நீரிழிவு மன அழுத்தத்தை பாதிக்கும் என்ற கூற்றும் நிலவுகிறது.
இந்த மனஅழுத்தம் டைப் நீரிழிவு நோயாளிகளிடம் மூன்று மடங்கும், டைப்2 நீரிழிவு நோயாகளிடத்தில் இரு மடங்கும் அதிகரித்து காணப்படுகிறது.
இது குறித்து பன்னர்கட்டா சாலையில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனை மனநலம் மற்றும் நடத்தை ஆலோசகர் மருத்துவர் வெங்கடேஷ் பாபு, நீரிழிவு ஒருவரின் மன ஆரோக்கியத்தை எப்படி சரியாகப் பாதிக்கிறது? என்பதை பகிர்ந்துக் கொண்டார்.
இது குறித்து அவர், உணர்ச்சிகள், சிந்தனை மற்றும் நடத்தை உட்பட அதன் அனைத்து செயல்முறைகளுக்கும் மூளையால் நிர்வகிக்கப்படுகிறது. இது குளூக்கோஸ் அதிகரிப்பால் பாதிக்கப்படும்” என்றார்.
இந்த நிலையில், டெல்லி துளசி ஹெல்த்கேர் மூத்த ஆலோசகர் மற்றும் மனநல மருத்துவர் கோரவ் குப்தா, “நமது தோல், கண்கள் மற்றும் பாதங்கள் மட்டுமின்றி, நமது உடலில் அதிகப்படியான குளுக்கோஸ் பாய்வதால் நமது மூளையும் பாதிக்கப்படுகிறது” என்றார்.
எனினும் பெங்களூரு அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனையின் பொது மருத்துவர் டாக்டர் ரவிசங்கர்ஜி கேசரி, “இது ஒரு பொதுவான பிரச்னை” என்றார். தொடர்ந்து அவர் கூறுகையில், “ஒரு நோயாளி நீரிழிவு நோயால் விரக்தியடைந்து, இவ்வாறு உணரலாம்” என்றார்.
மேலும், “ஒவ்வொரு நாளும் நீரிழிவு நோயைக் கவனித்துக் கொள்வதாலும், சிக்கல்களைப் பற்றிய பயத்தினாலும் இது நிகழ்கிறது” என்றார்.
தொடர்ந்து, “நீரிழிவு நோயாளிகளிடையே மன உளைச்சலுக்குப் பின்னால் உள்ள வேறு சில காரணங்கள் "நீரிழிவு நோயின் நிதி கவலை, காப்பீடு மற்றும் சிகிச்சை செலவுகள் ஆகும்” என்றார்.
இந்த நிலையில், “ஏற்கனவே உள்ள மனநல நிலைமைகள் உள்ளவர்களுக்கு, நீரிழிவு நோய் அவர்களின் மனச்சோர்வு அல்லது பதட்டத்தை மோசமாக்கும்” என்று பிஏஎம்எஸ், எஸ்ஆர் இன்ஸ்டிடியூட் ஆஃப் அட்வான்ஸ்டு ஆயுர்வேத அறிவியல் மருத்துவர் நிவேதிதா கௌதம் கூறினார்.
அந்த வகையில், நீரிழிவு இல்லாதவர்களை விட நீரிழிவு நோயாளிகளுக்கு மனச்சோர்வு ஏற்படுவதற்கான வாய்ப்பு 2-3 மடங்கு அதிகம் ஆகும்.
மேலும், மனச்சோர்வு உள்ள நீரிழிவு நோயாளிகளில் 25 சதவீதம் முதல் 50 சதவீதம் பேர் மட்டுமே மனச்சோர்வுக்கு சிகிச்சை பெறுகின்றனர்.
மனசோர்வில் இருந்து விடுபட என்ன வழி
நீரிழிவு நோயாளிகள் மட்டுமின்றி மற்றவர்களும் மனச்சோர்வில் இருந்து விடுபட வழிகள் உள்ளன. அந்த வகையில் புதுவிதமான ஆரோக்கியமான வாழ்க்கை முறை, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் உணவுகள் உட்கொள்ளுதல், தினமும் யோகா உள்ளிட்ட சின்ன சின்ன உடற்பயிற்சிகள் செய்தல் ஆகியவை உதவிகரமாக இருக்கும்.
மேலும், நீரிழிவு மேலாண்மை இலக்குகள் மற்றும் அவற்றை அடைய முயற்சித்தல் மற்றும் சிறிய விஷயங்களில் அதிக மன அழுத்தத்தை எடுத்துக் கொள்வதைத் தவிர்த்தல் மகிழ்ச்சியாக இருக்க முயற்சித்தல் ஆகியவையும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவிகரமாக இருக்கும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil