பொதுமக்கள் மத்தியில் எப்போதுமே பிரபலங்கள் சிறு வயதில் எப்படி இருந்திருப்பார்கள் என்று அவர்களின் சிறு வயது புகைப்படங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். பொதுமக்களின் இந்த ஆர்வத்தை இலக்காகக் கொண்டு இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் சினிமா பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் வெளியாகி நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது.
Advertisment
அந்த வகையில், 1990-களில் தமிழ் சினிமாவில் இளைஞர்களைக் கவர்ந்த ஃபேமஸ் நடிகையின் சிறு வயது புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுமியின் மூக்கும், முழியையும் ஒரு நிமிஷம் பார்த்துவிட்டு யார் இந்த ஃபேமஸ் நடிகை என்று சரியாக சொல்லுங்க பார்க்கலாம்.
சிறு வயதில் அழகாக மூக்கும் முழியுமாக இருக்கும் இந்த பிரபல நடிகை யார் என்று கண்டுபிடித்துவிட்டீர்களா? கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் உங்களுக்கு அபாரமான கற்பனை வளம் இருக்கிறது. அதே நேரத்தில் நீங்கள் நினைத்த நடிகை பெயர் சரிதானா என்று உறுதிப்படுத்திக் கொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்காக இது எந்த நடிகையின் சிறு வயது புகைப்படம் என்பதைக் கூறுகிறோம்.
Advertisment
Advertisements
தமிழ் சினிமா உலகில் 1990-களில் ஃபேமஸ் நடிகையாக வலம் வந்த நடிகை குஷ்புவின் சிறு வயது புகைப்படம்தான் இது. நடிகை குஷ்பு ரஜினி, கமல், பிரபு, கார்த்தி என அன்றைக்கு முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடியாக நடித்துள்ளார். குஷ்புவின் அழகில் மயங்கிய இளைஞர்கள் அன்றைக்கு அவருக்கு கோயில் கட்டியிருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
நடிகை குஷ்புவின் இந்த சிறு வயது புகைப்படத்தைப் பார்த்து அடையாளம் கண்டுபிடித்த நெட்டிசன்கள், மூக்கும் முழியும் அப்படியே இருக்கிறது என்று கூறுகிறார்கள்.
நடிகை குஷ்பு தற்போது பா.ஜ.க-வில் உள்ளார். அதுமட்டுமல்லாமல், அவர் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"