அழகென்றால் அவள் தானா... ஐஸ்வர்யா ராயை கண்டு பிரமித்த ரசிகர்கள்!!!

இதன் நீளம் சுமார் 10 அடி

கேன்ஸ்  திரைப்பட விழாவில்  நடிகை ஐஸ்வர்யா ராய் அணிந்திருந்த பட்டாம்பூச்சி உடை தான் டாக் ஆஃப டவுனாக மாறியுள்ளது.

பிரான்ஸில் நடைப்பெற்ற 71 ஆவது கேன்ஸ் பட விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய், அவரது செல்ல மகளான  ஆராத்யா வுடன்  சென்றார். அப்போது   விழாவில் வித்யாசமாக உடை அணிந்து  வந்து பார்ப்போரை பிரமிக்க வைத்தார்.  தொடர்ந்து மூன்று நாட்கள் ஐஸ்வர்யா ராய் அணிந்த வந்த ஆடை அங்கிருப்பவர்களை அன்னாந்து பார்க்க வைத்துள்ளது.

ரெட் கார்ப்பெட்டில், மெக்கேல் சின்கோ உருவாக்கிய கவுன் அணிந்து அசத்தினார். அதற்கு முந்தைய நாள், பிரபல ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் அரோரா வடிவமைத்த, மல்டி கலர் கவுன் அணிந்துகொண்டார். இப்படி ஐஸ்வர்யா ராய் அணிந்து வந்த 3 வகையான ஆடையும்  பெரும்பாலோனாரால் அதிகளவில் ரசிக்கப்பட்டுள்ளது.

சென்ற வருடம் இதே கேன்ஸ் படவிழாவில் ஐஸ்வர்யா ராய் சிண்ட்ரல்லா உடை அணிந்து வந்திருந்தார்.  இந்த வருடம் பட்டாம் பூச்சியை  தேர்ந்தெடுத்து பர்பிள் கலரில்  பட்டாம் பூச்சி போல் வடிவமைக்கப்பட்டடிருந்த நீளமான உடையை அணிந்து வந்தார்.

இதே விழாவில் நடிகை தீபிகா படுசோனே, மல்லிகா ஷெரவாத் போன்ற பல முன்னணி இளம் நடிகைகளும் கலந்துக் கொண்டனர். ஆனால், இவர்கள் எல்லோரையும் விட  ஐஸ்வர்யா ராய் தான் ஃபேஷனில் டாப் என்ற பெயரை பெற்றுள்ளார். இந்த ஆடையை வடிவமைக்க சுமார் 125 நாட்கள் ஆகியதாம். மேலும், இந்த ஆடை முழுவது பட்டு  நூலில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது என்று, இதன் நீளம் சுமார் 10 அடி என்ற செய்திகளும் சமூகவலைத்தளங்களில் உலா வருகின்றன.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close