அமைதியா இருக்க, சரியா பேசவே மாட்ற; இப்படி இருக்க கூடாது; பிரபல நடிகைக்கு கேப்டன் சொன்ன அட்வைஸ்!

சினிமாவிற்கு வந்த ஆரம்பத்தில் தனக்கு விஜயகாந்த் செய்த அட்வைஸ் குறித்து அவருடன் நடித்த நடிகை ஒருவர் மனம் திறந்து பேசியுள்ளார்.

சினிமாவிற்கு வந்த ஆரம்பத்தில் தனக்கு விஜயகாந்த் செய்த அட்வைஸ் குறித்து அவருடன் நடித்த நடிகை ஒருவர் மனம் திறந்து பேசியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Vijayakanth Death

தமிழ் சினிமாவின் 'கேப்டன்' என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் விஜயகாந்த், தனது நடிப்புத் திறமை மட்டுமல்லாமல், நிஜ வாழ்க்கையிலும் ஒரு சிறந்த மனிதர் என்பதைப் பலமுறை நிரூபித்திருக்கிறார். அவரது பெருந்தன்மையையும், உதவி மனப்பான்மையையும் பற்றி பலரும் பேசிக் கேட்டிருக்கிறோம். அந்த வரிசையில், 'வானத்தைப் போல' திரைப்படத்தில் அவருடன் நடித்த நடிகை கௌசல்யா, விஜயகாந்த் குறித்த நெகிழ்ச்சியான அனுபவத்தை கலாட்டாவுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த சம்பவம், விஜயகாந்தின் குணத்தை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவுகிறது.

Advertisment

kousalya

கௌசல்யா தனது திரைப்பயணத்தின் தொடக்கத்தில் விஜயகாந்துடன் ‘வானத்தைப் போல’ படத்தில் இணைந்தார். படப்பிடிப்பு ஒருநாள் முடிந்து, குழுவினர் அனைவரும் தங்கள் வாகனங்களில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, கனமழை பெய்து கொண்டிருந்தது. கௌசல்யா பயணித்த வண்டி திடீரெனப் பழுதடைந்து நடுவழியில் நின்றுவிட்டது. மழை கொட்டிக்கொண்டிருந்ததால் செய்வதறியாமல் நின்றுகொண்டிருந்த அவர்களைப் பார்த்த விஜயகாந்த், தனது காரை நிறுத்தி, உடனடியாக அவர்களுக்கு உதவ முன்வந்தார்.

vanathai pola

Advertisment
Advertisements

அவர் வெறும் உதவிக்கு மட்டும் நிற்காமல், தனது சொந்த முயற்சியில் வண்டியின் பழுதைச் சரிசெய்தார். பழுது நீக்கப்பட்ட பிறகும், அவர்கள் பாதுகாப்பாகப் புறப்பட்டுச் செல்லும் வரை, தனது காரிலேயே காத்திருக்க வைத்ததாக கூறினார். இது ஒரு திரைப்படத்தின் சக கலைஞருக்கு அவர் காட்டிய அக்கறையை வெளிப்படுத்துகிறது. ஒரு பெரிய நட்சத்திரமாக இருந்தும், எந்தவித ஈகோவும் இல்லாமல், உடனடியாக களமிறங்கி உதவிய அவரது செயல், கௌசல்யாவை மிகவும் கவர்ந்ததாக கூறினார்.

மேலும், விஜயகாந்த் வெறும் உதவிகளை மட்டும் செய்யாமல், கௌசல்யாவுக்கு சினிமாத் துறையில் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த நேர்மையான, உண்மையான ஆலோசனைகளையும் வழங்கியதாகவும் கௌசல்யா தெரிவித்தார்.  அவருடைய வழிகாட்டுதல்கள், கௌசல்யாவின் திரை வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகித்தன. விஜயகாந்த் தனது திரை வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் அவருக்கு நேர்மையான ஆலோசனைகளை வழங்கியதாக கௌசல்யா குறிப்பிட்டுள்ளார். சினிமா வந்த பிறகு  அமைதியா இருக்க, சரியா பேசவே மாட்ற, இப்படி இருக்க கூடாது என்று அறிவுரை வழங்கியதாக கூறினார்.

Vijayakanth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: