Advertisment

தனுஷ் vs சிவகார்த்திகேயன்... பொங்கல் தினத்தில் வரிசை கட்டும் 4 படங்கள் : வெற்றி யாருக்கு?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களின் படங்கள் வெளியாவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Pongal Release 4 Movies

கேப்டன் மில்லர் - அயலான் - மிஷன் சாப்டர் 1 - மெர்ரி கிறிஸ்துமஸ்

2024-ம் ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு 4 தமிழ் படங்கள் வெளியாக உள்ளது. ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் இந்த பொங்கல் தினத்தில் வெளியாகவில்லை என்றாலும், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களின் படங்கள் வெளியாவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கேப்டன் மில்லர்

தனுஷ் நடிப்பில் தயாராகியுள்ள படம் கேப்டன் மில்லர். ராக்கி, மற்றும் சாணிகாகிதம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்த படத்தில், பிரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ள நிலையில், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். ஜான் கோக்கன், சந்தீப் கிஷான், நாசர், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

அதிரடி ஆக்ஷன் பாணியில் தயாராகியுள்ள இந்த படத்தின் டிரெய்லர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கேப்டன் மில்லர் வரும் ஜனவரி 12 (நாளை) வெளியாக உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது டிரெய்லர் மூலம் தெரியவந்துள்ளது.

அயலான்

சிவகார்த்திகேயன் நடிப்பில் நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்து வரும் அயலான் படத்தை ரவிக்குமார் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில், யோகிபாபு, பானுபிரியா. கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். அறிவியல் புனைக்கதையான இந்த படத்தில் ஏலியன் முக்கிய கேரக்டரில் வருகிறது. இந்த ஏலியன் கேரக்டருக்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார்.

,ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில் சமீபத்தில் வெளியான இந்த படம், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. சில ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த இந்த படம் வெளியாவதில் சிக்கல் நீடித்து வருவதாக கூறப்படும் நிலையில், அயலான் நாளை (ஜனவரி 12) வெளியாகும் என்று படக்குழு திட்டவட்டமாக அறிவித்து ப்ரமோஷன் செய்து வருகின்றனர்.

மேர்ரி கிறிஸ்துமஸ்

இந்தி திரையுலகில் கவனிக்கப்படும் நடிகராக மாறியுள்ள விஜய் சேதுபதி கத்ரீனா கைப்புடன் இணைந்து நடித்துள்ள படம் மேர்ரி கிறிஸ்துமஸ். இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ள இந்த படத்தில், ராதிகா சரத்குமார், காயத்ரி, சண்முகராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் வெளியீட்டை விஜய் சேதுபதி ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நிலையில், நாளை (ஜனவரி 12) மேர்ரி கிறிஸ்துமஸ் திரைப்படம் வெளியாக உள்ளது.

மிஷன் சாப்டர் 1

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள படம் மிஷன் சாப்டர் 1. எமி ஜாக்சன், நிமிஷா சாஜன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஜ் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. மிஷன் சாப்டர் 1 அச்சம் என்பது இல்லையே என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் நாளை (ஜனவரி 12) வெளியாக உள்ளது.

இந்த பொங்கல் தினத்தில் பெரிய நடிகர்களின் படங்கள் இல்லை என்றாலும், இந்த 4 படங்களுமே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படம் குறித்த ப்ரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dhanush Sivakarthikeyan Vijay Sethupathi Tamil Cinema News Arun Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment