scorecardresearch

குடும்பத்தினருடன் திருமண நாளை கொண்டாடிய கேப்டன்!

கொரோனா வைரஸ் பயம் இல்லாதிருந்தால், நிச்சயம் ஆயிரக்கணக்கான மக்களுக்கு விருந்தளித்திருப்பார் கேப்டன்.

Vijayakanth Wedding Anniversary (1)
Vijayakanth Wedding Anniversary (1)

Captain Vijayakanth’s Wedding Anniversary : தனது இயல்பான நடிப்பாலும், யதார்த்தமான தோற்றத்தாலும் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் விஜயகாந்த். 80-களில் தொடங்கி பல ஹிட் படங்களைக் கொடுத்தவர். ஃபேமிலி ஆடியன்ஸ் அனைவரையும், தனது சிறப்பான நடிப்பால், கவர்ந்தவர்.

அமீரகம் போல் செயல்பட வேண்டும்… ஊரடங்கை மீறினால் தண்டனை என்ன தெரியுமா?

சினிமாவில் ஜெயித்து, ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்த கேப்டன், பின்னாட்களின் அரசியலிலும் நுழைந்தார். தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை நிறுவி, தமிழக எதிர்க்கட்சி தலைவராகவும் பொறுப்பு வகித்தார். இந்நிலையில் இந்த கனிவான ஹீரோ இன்று தனது முப்பதாவது திருமண விழாவை தனது வீட்டில் கொண்டாடியிருக்கிறார். மனைவி பிரேமலதா, மகன்கள் சண்முக பாண்டியன் மற்றும் பிரபாகரன் ஆகியோருடன் கூடிய பிரைவேட் விழாவாக இந்நிகழ்வு இருந்தது. இந்த  கொரோனா வைரஸ் பயம் இல்லாதிருந்தால், நிச்சயம் ஆயிரக்கணக்கான மக்களுக்கு விருந்தளித்திருப்பார் கேப்டன். அவரது கட்சித் தொண்டர்களும் வாழ்த்துத் தெரிவிக்கும் போஸ்டர்களை ஊர் முழுக்க ஒட்டியிருப்பார்கள்.

மூத்த ஆக்‌ஷன் ஹீரோவான கேப்டன் கடந்த சில ஆண்டுகளாக, உடல்நலக் குறைவால் போராடி வருகிறார். சமீபத்தில் அமெரிக்காவிலும் சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.

அன்லிமிடெட் லைவ் சேவை : கேண்டி க்ரஷ் பிரியரா நீங்கள்?

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Captain vijayakanth celebrates his 30th wedding day with wife premalatha and sons