அன்லிமிடெட் லைவ் சேவை : கேண்டி க்ரஷ் பிரியரா நீங்கள்?

கேண்டி க்ரஷ் சாகா என்பது மொபைல் பயனர்களை ஈர்க்கும் பிரபலமான விளையாட்டு. பெரும்பாலும் சவாலான டாஸ்க்குகளைக் கொண்டுள்ளது.

By: Updated: April 2, 2020, 04:09:43 PM

Candy Crush Saga : கொரோனா வைரஸ் முடக்கம் காரணமாக வீட்டில் உட்கார்ந்து, சலிப்படைந்திருக்கும் மில்லியன் கணக்கானவர்களுக்கு ஒரு  ஆச்சரியத்தை அளிக்கிறது மொபைல் கேம் டெவலப்பர் கிங்.

கொரோனா வைரஸ் ஊரடங்கு : இந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலிகள் தான்…

கேண்டி க்ரஷ் சாகா விளையாட்டாளர்கள் இந்த வாரம் வரம்பற்ற லைவ்வை பெற முடியும். சிறிய விவரங்களைப் பற்றி ஸ்ட்ரெஸ் ஆகாமல், இலவசமாக விளையாட்டை விளையாடலாம். இது கேண்டி க்ரஷ் சாகா விளையாட்டின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஹேண்டிலில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 5 வரை இலவச லைவ் மற்றும், குடீஸ்களையும் பெற முடியும்.

கிங் போர்ட்ஃபோலியோவிலிருந்து வேறு ஏதேனும் விளையாட்டுகளை நீங்கள் விளையாடுகிறீர்கள் என்றால், அதே இலவச வரம்பற்ற லைவை நீங்கள் பெறலாம். கேண்டி க்ரஷ் சோடா சாகா, கேண்டி க்ரஷ் ஜெல்லி சாகா, கேண்டி க்ரஷ் ஃபிரண்ட்ஸ் சாகா, ஃபார்ம் ஹீரோஸ் சாகா, பப்பில் விட்ச் 3 சாகா, மற்றும் பெட் ரெஸ்க்யூ சாகா உள்ளிட்ட விளையாட்டுகளை நீங்கள் இந்த இலவச லைவ் சேவையைப் பெற முடியும்.

கேண்டி க்ரஷ் சாகாவின், டெவலப்பர்களான கிங், கேமிங் துறையின் புதிய #PlayApartTogether முன் முயற்சியின் ஒரு பகுதியாகும். இது கொரோனா வைரஸ் அல்லது COVID-19 பற்றிய வழிகாட்டுதல்களையும் விழிப்புணர்வையும் மேம்படுத்துவதற்காகவும், பாதுகாப்பாக இருப்பதற்காகவும், உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) ஆதரிக்கப்பட்டுள்ளது.

“எங்கள் ப்ளேயர்களை ஊக்குவிக்க #PlayApartTogether-க்கு WHO உடன் நாங்கள் இணைந்துள்ளோம். ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக இருக்க நாம் செய்யக்கூடிய மிகச் சிறந்த விஷயம். சிறிது நேரம் ஒதுக்கி, சமூக தனித்திருத்தலை பின்பற்றுவது அவசியமான ஒன்று. ஆகையால் ஏப்ரல் 5 வரை எங்கள் பெரும்பாலான விளையாட்டுகளில் வரம்பற்ற லைவை வழங்குகிறோம்” என்று கேண்டி கிரஷ் கேம் டெவலப்பர்கள் தெரிவித்துள்ளனர்.

கேண்டி க்ரஷ் சாகா என்பது மொபைல் பயனர்களை ஈர்க்கும் பிரபலமான விளையாட்டு. பெரும்பாலும் சவாலான டாஸ்க்குகளைக் கொண்டுள்ளது. ஐபோன், ஐபாட் மற்றும் ஐபாட் டச் ஆகியவற்றிற்கு ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்தும், ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு கூகிள் பிளே ஸ்டோரிலிருந்தும், அமேசான் ஆப் ஸ்டோரிலிருந்தும், விண்டோஸ் சாதனங்களுக்கு மைக்ரோசாஃப்ட் ஸ்டோரிலிருந்தும் இந்த விளையாட்டை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். அதோடு ஆன்லைனிலும் விளையாடலாம். கூகிள் பிளே ஸ்டோரில் 1,000,000,000+ பேர் இதுவரை பதிவிறக்கம் செய்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் கேண்டி க்ரஷ் சாகா டெவலப்பர் கிங்கின் மூத்த துணைத் தலைவர் அலெக்ஸ் டேல், இங்கிலாந்து ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் தேர்வுக் குழுவிடம், இவ்விளையாட்டு 270 மில்லியன் பிளேயர்களைக் கொண்டிருப்பதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.

டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர் தற்கொலை முயற்சி: 6-வது மாடியில் இருந்து குதித்தார்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Candy crush saga unlimited live free for corona quarantine

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X