/tamil-ie/media/media_files/uploads/2020/11/cardi-b.jpg)
சர்வதேச ராப் இசை பாடகி கார்டி பி ஒரு காலணி இதழின் நவம்பர் மாத இதழ் அட்டைப் படத்துக்காக இந்து மத பெண் தெய்வம் துர்கா தேவி போல போஸ் கொடுத்ததற்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.
காலணி இதழ் அட்டைப் படத்தில் இந்து மத பெண் தெயவம் துர்கா தேவி போல 10 கைகளுடன் போஸ் கொடுத்த கார்டி பி, ஒரு கையில் ஆயுதங்களுக்கு பதில் காலணி வைத்துக்கொண்டு போஸ் கொடுத்திருதார்.
இது குறித்து வீடியொ ஒன்றை வெளியிட்டுள்ள கார்டி பி, கூறுகையில், “நான் படப்பிடிப்பு செய்தபோது, படைப்பாளிகள் நான் ஒரு தெய்வத்தை பிரதிநிதித்துவப்படுத்தப் போவதாக என்னிடம் சொன்னார்கள்; அவள் வலிமை, பெண்மை மற்றும் விடுதலையை பிரதிநிதித்துவப்படுத்துகிறாள். அவை எல்லாமே நான் விரும்பும் ஒன்று. அவை ஊக்கமளித்த போதிலும், நான் அவர்களின் கலாச்சாரத்தை அல்லது அவர்களின் மதத்தை புண்படுத்துவதாக மக்கள் நினைத்தால், அது எனது நோக்கம் அல்ல என்று சொல்ல விரும்புகிறேன். யாருடைய மதத்தையும் புண்படுத்த நான் விரும்பவில்லை; யாராவது எனது மதத்திற்கு இதைச் செய்தால் நான் விரும்ப மாட்டேன்.” என்று கார்டி பி மன்னிப்பு கேட்டுள்ளார்.
மேலும், கார்டி பி கூறுகையில், “மக்கள் கன்னி மரியா மற்றும் இயேசுவாக ஆடை அணியும்போது, அவர்கள் அதை அழகாகவும் கருணையுடன் செய்யும் வரை விரும்புவார்கள்... ஆனால், நான் அவமரியாதை செய்ய முயற்சிக்கவில்லை; நான் ஆராய்ச்சி செய்திருக்கலாம்; மன்னிக்கவும், என்னால் கடந்த காலத்தை மாற்ற முடியாது. ஆனால் எதிர்காலத்தைப் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்வேன்.” என்று மன்னிப்பு கோரியுள்ளார்.
அட்டைப் புகைப்படத்திற்காக கார்டி பி ஒரு தோள்பட்டை சிவப்பு ஜார்ஜஸ் ஹோபிகா ஆடை அணிந்திருப்பதைக் பார்க்க முடிகிறது. கார்டி பி தனது போஸ் குறித்து விரிவாகக் குறிப்பிடுகையில், “… அவள் துர்கா என்ற இந்து தெய்வத்திற்கு மரியாதை செலுத்துகிறார். அவள் பாதுகாப்பு மற்றும் உள் வலிமையின் அடையாளங்கள் நவீன காலங்களில் பல நூற்றாண்டுகளாக எதிரொலிக்கின்றன. துர்காவைப் போலவே, கார்டி பி ஒரு முக்கியமான நேரத்தில் ஆதிக்கம் செலுத்தும் பெண் குரல்.” என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஃபோட்டோஷூட் என்ற கருத்தில் நெட்டிசன்கள் அதிருப்தி அடைந்தனர். மேலும், மத உணர்வுகளை புண்படுத்தியதற்காக ராப் இசை பாடகி கார்டி பி-யிடம் சுட்டிக்காட்டினார்கள்.
ஒரு டுவிட்டர் பயனர் குறிப்பிடுகையில், “கார்டி பி தனது கையில் ஒரு ஷூவை வைத்துகொண்டு இந்து தெய்வமான துர்காவுக்கு மரியாதை செலுத்தவில்லை. இது வெறும் அவமரியாதை. எந்த வகையிலும் கலாச்சார பாராட்டு. கிடையாது. எங்கள் கலாச்சாரத்தை கேலி செய்ததற்காக உரையாற்றாமலும் மன்னிப்பு கேட்காமலும் அவளால் இதை விட்டு வெளியேற முடியாது.” என்று கூறியிருந்தார்.
மற்றொருவர், “இது கார்டி பி இந்து தெய்வமான துர்காவுக்கு மரியாதை செலுத்துகிறார்... இது நேரடியான இனவெறி.” என்று குறிப்பிட்டிருந்தார்.
“கோழை கார்டி பி தனது கணக்கை டி ஆக்டிவேட் செய்துள்ளார். இல்லையெனில், துர்கா தெய்வத்திலிருந்து (அவள் ஒரு மனிதர் உட்பட) எத்தனை வழிகளில் வித்தியாசமாக இருக்கிறாள் என்று கார்டி பிக்கு நாங்கள் கற்பித்திருப்போம்” என்று மற்றொரு டுவிட்டர் பயணர் தெரிவித்தார்.
இவ்வாறு சமூக ஊடகங்களில் கார்டி பி துர்கா தேவி போஸ் புகைப்படத்துக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், ராப் இசை பாடகி கார்டி பி தான் எந்த மதத்தையும் புன்படுத்தவில்லை என்று கூறி மன்னிப்பு கேட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.