உடல் நலக்குறைவு காரணமாக லண்டனில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாம்பே ஜெயஸ்ரீ தற்போது குணமடைந்து வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் பாடியுள்ள பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீ, கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பின்னர் லண்டன் சென்றுள்ளார். இன்று அவர் லண்டனில் உள்ள துங் அரங்கில் நிகழ்ச்சி ஒன்று நடத்த இருந்தார். இந்த நிலையில் அவர் மயக்க நிலையில் வீட்டில் கண்டெடுக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது.
அவருக்கு அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
பாம்பே ஜெயஸ்ரீ இந்த வார தொடக்கத்தில், தி மியூசிக் அகாடமியின் மிகவும் மதிப்புமிக்க கவுரவமான சங்கீதா கலாநிதி விருதுக்கு தேர்வானார்.
அவரது மெல்லிசை மற்றும் தியானப் பாணியிலான பாடலுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட இருந்தது. தற்போது பாம்பே ஜெயஸ்ரீக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/