பார்வதி நாயரின் வீட்டு பணியாளர் சுபாஷ் சந்திரபோஸ், நடிகை பார்வதி நாயர் அவரை கே.ஜே.ஆர் ஸ்டுடியோவில் தாக்கினார் என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, பார்வதி நாயர் தனது வீட்டில் தங்கம் மற்றும் பணம் காணாமல் போனதாக வீட்டு பணியாளர் மீது புகார் அளித்திருந்தார். (Image: Parvati/Instagram)
வீட்டு பணியாளர் சுபாஷ் சந்திரபோஸ், நடிகை பார்வதி நாயர் அவரை கே.ஜே.ஆர் ஸ்டுடியோவில் தாக்கினார் என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, பார்வதி நாயர் தனது வீட்டில் தங்கம் மற்றும் பணம் காணாமல் போனதாக வீட்டு பணியாளர் மீது புகார் அளித்திருந்தார்.
நடிகை பார்வதி நாயர் தன்னைத் தாக்கியதாக அவரது வீட்டு பணியாளர் சுபாஷ் சந்திரபோஸ் அளித்த புகாரின் அடிப்படையில், ‘தி கோட்’ பட நடிகை பார்வதி நாயர் மீது தமிழ்நாடு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பிரிவு 296(பி), 115(2), மற்றும் 351(2) பி.என்.எஸ் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டி.எஸ்.ஆர் நகல் படி, சுபாஷ் சந்திரபோஸ் கே.ஜே.ஆர் ஸ்டுடியோவில் உதவியாளராகவும் பணியாற்றினார்.
2022-ம் ஆண்டில், நடிகை தனது வீட்டில் தங்கம், ரூ. 9 லட்சம், ஐபோன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றைக் காணவில்லை என்று வீட்டுப் பணியாளருக்கு எதிராக புகார் அளித்தார். அப்போது தனது வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சுபாஷ் சந்திரபோஸ் என்ற வீட்டு பணியாளர் மீது சந்தேகம் தெரிவித்தார்.
Advertisment
Advertisements
இதைத் தொடர்ந்து, நடிகை பார்வதி நாயர் மற்றும் அவரது உதவியாளர்கள் தன்னைத் தாக்கியதாக சுபாஷ் சந்திரபோஸ் புகார் அளித்தார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் குறிப்பிடுகையில், அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, கே.ஜே.ஆர் ஸ்டுடியோவில் வேலைக்குத் திரும்பியதாக கூறியுள்ளது. அங்கே நடிகை பார்வதி நாயர் அவரை அறைந்தார். மேலும், நடிகை பார்வதி நாயரின் உதவியாளர்கள் 5 பேர் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறினார்.
இந்த சம்பவத்தையடுத்து, சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சுபாஷ் புகார் அளித்தார். அவரது புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால், வீட்டு பணியாளர் சுபாஷ் சந்திரபோஸ் சைதாப்பேட்டை 19வது எம்.எம் கோர்ட்டை அணுகினார். இப்போது, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பார்வதி மற்றும் 7 பேர் மீது போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.
‘தி கோட்’ படத்தில் நடிகர் விஜய் உடன் சேர்ந்து நடித்த பார்வதி நாயர்
தி கோட்’ படத்தில் நடிகர் விஜய் உடன் நடித்த பார்வதி நாயர்
பார்வதி நாயர் முன்பு தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்திருந்தார். இழந்த பணத்தை மீட்பதற்காகத்தான் முதலில் புகாரை தாக்கல் செய்ததாகக் கூறினார். திருட்டுக்குப் பிறகு சுபாஷிடம் விசாரித்ததாகவும், ஆனால், அவரது பதில்களில் திருப்தி இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சமீபத்திய நிகழ்வுகளுக்கு நடிகை பார்வதி நாயர் இன்னும் பதிலளிக்கவில்லை.
நடிகை பார்வதி நாயர் சமீபத்தில் தளபதி விஜய்யின் தி கோட் திரைப்படத்தில் துணை வேடத்தில் நடித்தார். ரன்வீர் சிங் நடித்த 83 படத்திலும் பார்வதி நாயர் நடித்தர். அடுத்து, தமிழ் திரைப்படமான ஆலம்பனாவில் நடிக்க உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“