Advertisment

13 மாற்றகள் செய்தால் படத்தை வெளியிடலாம்: எமர்ஜென்சி படத்திற்கு செக் வைத்த தணிக்கை வாரியம்!

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு சீக்கியவர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பு எழுந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Emergency Movie Kangana

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு பாலிவுட்டில் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ள எமர்ஜென்சி திரைப்படம் வெளியீட்டுக்கு முன்னதாக 13 மாற்றங்களை மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

Read In English: CBFC panel for 13 changes in Kangana Ranaut’s Emergency before release

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரனவாத் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது எம்.பி.யாக இருக்கும் அவர், தேர்தலுக்கு முன்பாக எமர்ஜென்சி என்ற படத்தை தயாரித்து இயக்கி நடித்திருந்தார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு சீக்கியவர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதன் காரணமாக மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் தணிக்ணை சான்று கொடுக்க ஆலோசனை நடத்தி வருவதால், படத்தின் வெளியீட்டு தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்ட நிலையில், சீக்கியர்கள் குழு ஆட்சேபனை தெரிவித்த காட்சிகள் தொடர்பான, நீங்க வேண்டியது மற்றும் சேர்க்க வேண்டிய காட்சிகள் என மொத்தம் 13 மாற்றங்களை படக்குழ செய்திருந்தால், எமர்ஜென்சி படத்திற்கு யு/ஏ கிடைக்கும் என்று மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தின் (CBFC) திருத்தக் குழு அனுமதித்துள்ளது.

இது குறித்து நேற்று (செப்டம்பர் 26) மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் மும்பை உயர் நீதிமன்றத்திற்கு கொடுக்கப்பட்ட விளக்கத்தில், படத்தில் நீங்க வேண்டிய சில காட்சிகளை பரிந்துரை செய்துள்ளதாக கூறியுள்ளது. இந்த படத்திற்கு "சட்டவிரோதமாக" மற்றும் "தன்னிச்சையாக" சான்றிதழை கொடுக்க மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம், மறுப்பதாக படத்தின் இணை தயாரிப்பாளரான ஜீ என்டர்டெயின்மென்ட்டின் குற்றச்சாட்டுக்கும் வேண்டுகோளுக்கு தற்போது பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஜீ என்டர்டெயின்மென்ட் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், படத்தில் நீங்க வேண்டிய காட்சிகளாக பரிந்துரை செய்யப்பட்டுள்ள காட்சிகளை நீக்கம் செய்ய வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க அறிவுறுத்தல்களைப் பெற அவகாசம் தேவை என்று கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட  நீதிபதிகள் பி.பி கொலபவாலா மற்றும் ஃபிர்தோஷ் பி பூனிவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை செப்டம்பர் 30-க்கு விசாரணைக்கு ஒத்திவைத்தது.

இது குறித்து திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் அளித்துள்ள தகவல்களின்படி, திரைப்பட ட்ரெய்லரில் தங்களது சமூகத்தை சித்தரிப்பது குறித்த கவலைகளை எழுப்பும் சீக்கிய குழுக்களின் பிரதிநிதித்துவத்தை மறுஆய்வுக் குழு ஆய்வு செய்தது. அதன்படி பரிந்துரை செய்த மாற்றங்களை செய்தால், படத்திற்குயு/ஏ (UA) சான்றிதழ் வழங்குவதற்கான சாத்தியங்கள் உள்ளது. அரசியல் வன்முறை மற்றும் அமைதியின்மை ஆகியவற்றை சித்தரிக்கும் காட்சிகள், பெண்களுக்கு எதிரான அட்டூழியங்கள் பற்றிய குறிப்புகள்" படத்தில் இருப்பதாகவும், எனவே, அதை பெற்றோரின் வழிகாட்டுதலுடன் பார்ப்பதற்கு ஏற்றதாகக் இருக்கிறது என்று வாரியம் கூறியுள்ளது.

13 மாற்றங்களில், இரண்டு உயர்மட்ட அரசியல் தலைவர்களுக்கு இடையேயான ஒரு குறிப்பிட்ட உரையாடலில் இருந்து 'சாண்ட்' மற்றும் 'பிந்த்ரன்வாலே' என்ற வார்த்தைகளை நீக்குதல், பிந்திரன்வாலேவைப் புகழ்ந்து பேசும் சொற்றொடரை நீக்குதல் மற்றும் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் மற்றும் உரையாடல்களை நீக்குதல் சீக்கியர் அல்லாதவர்களை குறிவைத்தல் உட்பட 6 சேர்ப்பு  மற்றும் 4 நீக்கம் செய்யப்பட வேண்டிய காட்சிகளை குழு பரிந்துரைத்துள்ளது.

மேலும், ‘காலிஸ்தான்’ என்ற வசனத்தை நீக்கிவிட்டு, சீக்கியர்களை சித்தரிக்கும் சில காட்சிகளை தொனிக்குமாறும், காட்சிகள் மற்றும் உரையாடல்களில் மூன்று மாற்றங்களைச் செய்யுமாறு தயாரிப்பாளர்களை வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்தத் திரைப்படம் "உண்மையான நிகழ்வுகளால் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது என்றும் "வியத்தகு மாற்றம்" என்றும் கூறி, மறுஆய்வுக் குழு தொடக்கத்தில் இந்த படத்திற்கு மாற்றங்களுக்கு மறுப்பு தெரிவித்தாகவும் தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அதே சமயம், சான்றிதழால் ஏற்படும் தாமதம் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதாக இருக்கும் என்று கூறிய உயர்நீதிமன்றம், படத்தை வெளியிடுவது குறித்து செப்டம்பர் 25ஆம் தேதிக்குள் முடிவெடுக்குமாறு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திற்கு செப்டம்பர் 19ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. அதே சமயம் முந்தைய விசாரணையின்போது ஹரியானா தேர்தல்கள் தான் சான்றிதழ் வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு காரணம் என்று கூறியிருந்தார்.

இது குறித்து மனுதாரர் ஜீ என்டர்டெயின்மென்ட் வழக்கறிஞர் கூறுகையில், சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை திருப்திப்படுத்த, தற்போதைய எம்.பி.யை (இணை தயாரிப்பாளரும், மக்களவையில் மண்டி தொகுதியின் எம்.பி கங்கனா ரனாவத்) அதிருப்திபடுத்தவும் தயாராக உள்ளனர். சில குழுக்கள் இது சீக்கியர்களுக்கு எதிரான ஒரு படம் என்று கூறுகிறார்கள். அப்படியென்றால் சீக்கியர்களுக்கு எதிரான படம் வெளியானால் அதற்கு யார் பொறுப்பு? இந்த படம் வெளியானால்,  வரும் ஹரியானா தேர்தலில் ஆளும் கட்சிக்கு வாக்களிக்க மாட்டோம் என்று சமூகத்தைச் சேர்ந்த சிலர் கூறுவார்கள்” என்று கூறியுள்ளார்.

இதை கேட்ட நீதிபதிகள், “அரசியல் கட்சி அதன் சொந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக ஆட்சி செய்கிறது என்று சொல்கிறீர்களா?” கேட்டபோது அவருக்கு சாதகமாக பதில் அளித்து இந்த விவகாரத்தில் அவசர முடிவு தேவை என்று வற்புறுத்தினார். அதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற விசாரணையில், எங்களுக்கு நல்ல செய்தி கொடுங்கள் என்று படத்தில் சில காட்சிகளை நீக்கம் செய்ய பரிந்துரை செய்துள்ளோம். அதை நீக்கினால் படத்தை வெளியிடலாம் என்று, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் சார்பாக ஆன அபினவ் சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Kangana Ranaut Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment