ஆங்கிலத்தில் படிக்க...
தனது மார்க் ஆண்டனி திரைப்படத்தை இந்தியில் வெளியிட தணிக்கை சான்று பெறுவதற்கு மத்திய தணிக்கை வாரிய அதிகாரிகள் தன்னிடம் லஞ்சம் வாங்கியாக நடிகர் விஷால் அளித்த புகாரை தொடர்ந்து 3 அதிகாரிகள் மீது மத்திய புலனாய்பு அமைப்பு வழக்கு பதிவு செய்துள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் இணைந்து நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் தென்னிந்தியாவில் கடந்த செப்டம்பர் 15-ந் தேதி வெளியானர். ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று சுமார் 100 கோடிக்கு மேலாக வசூல் செய்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் கடந்த செப்டம்பர் 28-ந் தேதி இந்தியில் வெளியாக அங்கேயும் வரவேற்பை பெற்று வருகிறது.
இதனிடையே மார்க் ஆண்டனி படத்தின் இந்திய பதிப்புக்கு தணிக்கை சான்று வழங்க மும்பை மத்திய தணிக்கை வாரிய அதிகாரிகள் தன்னிடம் 6.5 லட்சம் லஞ்சம் வாங்கியதாக நடிகர் விஷால் ட்விட்டர் மூலம் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட மத்திய புலனாய்வு துறை அதிகரிகள, தணிக்கை வாரிய பணியாளர்கள் சிலர் மற்றும் 3 அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட தணிக்கை வாரிய பணியாளர்களின் பெயர்களை வெளியிடாத சிபிஐ அதிகாரிகள் மெர்லின் மேனகா, ஜீஜா ராம்தாஸ் மற்றும் ராஜன் எம் என 3 அதிகாரிகள் பெயரை மட்டும் அடையாளம் காட்டியுள்ளனர். செப்டம்பர் மாதம் 7 லட்சம் லஞ்சம் கேட்க மேனகா மற்ற இருவருடனும் சில தணிக்கை வாரிய அதிகாரிகளுடனும் சேர்ந்து பேசியதாக கூறப்படுகிறது. விஷால் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையே பேச்சுவார்த்தை முடிந்த பிறகு, ராமதாஸ் மற்றும் ராஜனின் வங்கிக் கணக்குகளில் தணிக்கை வாரிய அதிகாரிகள் சார்பில் ரூ.6.54 லட்சம் லஞ்சமாகப் பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர்களது வங்கிக் கணக்குகளில் இருந்து உடனடியாக ரூ.6.5 லட்சம் எடுக்கப்பட்டதாகவும், செப்டம்பர் 26 ஆம் தேதி சென்சார் சான்றிதழை தணிக்கை வாரிய அதிகரிகள் வழங்கியதாகவும், புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், மேனகா தனது வங்கிக் கணக்கில் 20,000 ரூபாயை ஒரு தனியார் நிறுவனத்தின் கணக்கில் இருந்து தனக்கு சுமோகமாக பேசி முடித்ததற்கு கட்டணமாகப் பெற்றதாகவும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரு வாரத்திற்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் புகார் அளித்திருந்த நடிகர் விஷால், இந்த "ஊழல்" குறித்து விசாரிக்க பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோருக்கும் அவர் வேண்டுகோள் விடுத்தார். இந்த புகாருக்கு ஒரு நாள் கழித்து, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தது.
குற்றச்சாட்டுகள் குறித்து "உடனடி விசாரணைக்கு" உத்தரவிட்டு, அரசாங்கம் கடந்த வாரம் கூடுதல் செயலாளர், நீரஜா சேகரை மும்பைக்கு அனுப்பி, விசாரணை நடத்தி, அறிக்கையை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க உத்தரவிட்டது. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர், இந்த விசாரணை முற்றிலும் வெளிப்படைத்தன்மையாக இருப்பதை உறுதிசெய்ய, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை அதிகப்படுத்துமாறு அமைச்சகத்திற்கு உத்தரவிட்டார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய மற்றவர்களின் வளாகங்களில் மும்பை உட்பட நான்கு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது, இந்த சோதனையில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஆவணங்களை கிடைக்க முக்கிய வழியாக அமைந்தது.
மத்திய தணிக்கை வாரியத்தில், ஆன்லைன் சான்றிதழ் அமைப்பு (E-Cinepramaan) நடைமுறையில் இருந்தாலும், திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் விண்ணப்பதாரர்கள் இடைத்தரகர்கள் அல்லது முகவர்கள் மூலம் விண்ணப்பிக்கத் தேர்வு செய்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் திரைப்பட தயாரிப்பாளர்களை தணிக்கை சான்றுக்காக "எந்தவொரு இடைத்தரகர் அல்லது மூன்றாம் தரப்பு முகவருடனும் கையாள வேண்டாம்" என்று எச்சரித்துள்ளனர்.
மேலும் தணிக்கை வாரிய அதிகாரிகள் பிரதிநிதித்துவப்படுத்துவதாக ஏதேனும் மூன்றாம் தரப்பினர் கூறி, ஏதேனும் தொகையை கேட்டால் உடனடியாக அதை தணிக்கை வாரிய அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அதிகாரிகள், திரைப்படத் தயாரிப்பாளர் பிரசூன் ஜோஷி அதன் தலைவராகவும், இந்தியன் ரயில்வே ஸ்டோர்ஸ் சர்வீஸ் (IRSS) அதிகாரி ரவீந்தர் பாகர் அதன் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ள சான்றிதழ் அமைப்பு, குற்றச்சாட்டுகளை மிகவும் தீவிரமாகக் கவனித்ததாகவும், சம்பந்தப்பட்ட எவருக்கும் எதிராக "கடுமையான நடவடிக்கை" எடுப்பதாகவும் கூறியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“