சென்னையில் புது வீட்டில் குடும்பத்துடன் குடியேறிய இயக்குனர் மாரி செல்வராஜ்!
'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' போன்ற விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது அம்பத்தூர் அருகே உள்ள தனது புதிய வீட்டிற்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்துள்ளார்.
Celebrities attend director mari selvaraj house warming
'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' போன்ற விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது அம்பத்தூர் அருகே உள்ள தனது புதிய வீட்டிற்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்துள்ளார்.
Advertisment
இயக்குனர் மாரி செல்வராஜ் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் மிகவும் செல்வாக்கு மிக்க திரைப்பட இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்தார். அவரது முதல் படமான 'பரியேறும் பெருமாள்' மற்றும் தனுஷ் நடித்த 'கர்ணன்' ஆகிய இரண்டும் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, அனைத்து தரப்பிலும் விமர்சன ரீதியான பாராட்டையும் பெற்றன.
இந்நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ், சென்னை அம்பத்தூரில் புது வீடு கட்டி’ தனது குடும்பத்தினருடன் அங்கு குடியேறியுள்ளார்.
மாரி செல்வராஜின் வழிகாட்டியாக இருக்கும் இயக்குநர் ராமின் ஆசியுடன் சமீபத்தில் அவர் இல்லறம் நடத்தினார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
Advertisment
Advertisement
விழாவில் இயக்குநர்கள் ராம், பா.ரஞ்சித், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
நடிகர்/அரசியல்வாதி உதயநிதி ஸ்டாலின், இயக்குனரின் புதிய இல்லத்துக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்க, கீர்த்தி சுரேஷ், ஃபகத் பாசில், வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். மேலும் துருவ் விக்ரம் நடிக்கும் ஒரு படத்தையும் இயக்குகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“