Celebrities Christmas Celebration: இந்த வருடத்தின் இறுதி பண்டிகையான கிறிஸ்துமஸ் விழா, நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனை நமக்குப் பிடித்த தென்னிந்திய பிரபலங்கள் வெகு விமர்சையாகக் கொண்டாடினர். சமந்தா அக்கினேனி, பூஜா ஹெக்டே, ஆண்ட்ரியா ஜெரேமியா, கேத்தரின் தெரெசா, ஐஸ்வர்யா தனுஷ் மற்றும் நம்ரதா ஷிரோட்கர் ஆகியோர் தங்கள் கொண்டாட்டத்தின் படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
இன்று காணப்பட்டது அரிய வகை சூரிய கிரகணமா ?
நடிகை சமந்தா அக்கினேனி வறுமைக் கோட்டுக்குக் கீழேயுள்ள குழந்தைகளுடன் கிறிஸ்துமஸை கழித்தார். படத்தைப் பகிர்ந்து, “குழந்தைகள் விருந்தில் நான்” என குறிப்பிட்டிருக்கிறார். ஆண்ட்ரியா எரேமியா ஒரு அபிமான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார், அதில் அவர் ஒரு கிறிஸ்துமஸ் மரத்தின் முன் நிற்பதைக் காணலாம். புகைப்படத்திற்கு, “இனிய விடுமுறை நாட்கள்” என்று தலைப்பிட்டுள்ளார். தற்போது விஜய்யுடன், லோகேஷ் கனகராஜின் அடுத்த படமான தளபதி 64 படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார் ஆண்ட்ரியாதெலுங்கு சூப்பர் ஸ்டார், மகேஷ் பாபுவின் மனைவி நம்ரதா ஷிரோட்கரும் தன் குடும்பத்துடன் கிறிஸ்துமஸைக் கொண்டாடினார். ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்த ஷிரோட்கர், “அன்பு செலுத்துபவர்களுக்கும், கொடுப்பவர்களுக்கும், மகிழ்ச்சியை பரப்புபவர்களுக்கும், இந்த நேரத்தில் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் !!” என்று குறிப்பிட்டிருந்தார். கடைசியாக அருவம் திரைப்படத்தில் நடித்திருந்த கேத்தரின் தெரெஸா, தனது கிறிஸ்துமஸை மிகச் சிறந்த முறையில் கொண்டாடினார். பீட்ஸா பாக்ஸுடன் படத்தைப் பதிவிட்ட அவர், “என் சிறந்த விடுமுறை, மெர்ரி கிறிஸ்துமஸ் !!” என வாழ்த்தியிருக்கிறார். கணவர் விஷாகன் மற்றும் மகன் வேத் ஆகியோருடன் செளந்தர்யா ரஜினிகாந்த் கிறிஸ்துமஸ் கொண்டாடினார். அலங்கரிக்கப்பட்ட ஒரு மரத்தின் முன் சாண்டா கிளாஸ் உடையணிந்த வேத்தின் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்ஜன்னலில் தங்களது கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்களை அலங்கரித்து கிறிஸ்துமஸைக் கொண்டாடினார் ஐஸ்வர்யா தனுஷ்தர்பார் படத்தின் தயாரிப்பு நிறுவனமான, லைகா நிறுவனம், படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு, ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்தது.