வாழ்த்து மழையால் நனைந்த சிம்பு: பர்த்டே ஸ்பெஷல்!

இன்று 35 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் சிம்புவிற்கு திரையுலகத்தினர் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இன்று 35 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் சிம்புவிற்கு திரையுலகத்தினர் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் விஜய், அஜித் பிறந்த நாளை போலவே, சிம்புவின் பிறந்த நாளும் அவர்களின் ரசிகர்களால் விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகம் கொண்ட கலைஞராக திகழும் சிம்புவிற்கு ஆண் ரசிகர்களை போல் பெண் ரசிகைகளும் ஏராளம். இன்று 35 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் சிம்புவிற்கு திரையுலகில் நண்பர்கள் அதிகம்.

சமீபத்தில் சந்தானத்தின் நடிப்பில் வெளியான ‘சக்கை போடு போடு ராஜா’ படத்தில் சிம்பு இசையமைப்பாளராக களம் இறங்கினார். அவரின் இசைக்காகவே திரையரங்குகளில் படத்தை பார்க்க சென்ற ரசிகர்களும் ஏராளம். நடிகர் அஜித்தின் தீவிர ரசிகரான சிம்பு, ஒவ்வொரு வருடமும் தனது பிறந்தநாள் அன்று அஜித்திடம் சென்று வாழ்த்து பெறுவதை வழக்கமாக வைத்திருப்பதாக பல பேட்டிகளில் கூறியுள்ளார். இந்நிலையில், சிம்புவிற்கு திரையுலகத்தினர் அனைவரும் தங்களின் ட்விட்டர் பக்கத்தில்  பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அதனுடன், #HappyBirthdaySTR #HBDSTR போன்ற ஹாஷ்டேக்கும் இணையதளங்களில் ட்ரெண்ட் அடித்து வருகிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

×Close
×Close