வீட்டில் பிணமாக கிடந்த பிரபல தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினி – கொலையா? தற்கொலையா?

கேரளாவில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ‘ஜாகீ’ஸ் குக் புக் (Jagee’s Cookbook) என்ற சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமடைந்தவர் ஜாகீ ஜான் (jagee john). ஜாகீ கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தாயாருடன் வசித்து வருகிறார். உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா ?? இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள தனது வீட்டின் சமையலறையில் ஜாகீ மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். கொச்சியில் இருக்கும் ஜாகீயின் நண்பர் கடந்த திங்களன்று அவரை செல்போனில் […]

Celebrity chef at kerala Jagee John found dead in her house - வீட்டில் பிணமாக கிடந்த பிரபல தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினி - கொலையா? தற்கொலையா?
Celebrity chef at kerala Jagee John found dead in her house – வீட்டில் பிணமாக கிடந்த பிரபல தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினி – கொலையா? தற்கொலையா?

கேரளாவில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ‘ஜாகீ’ஸ் குக் புக் (Jagee’s Cookbook) என்ற சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமடைந்தவர் ஜாகீ ஜான் (jagee john). ஜாகீ கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தாயாருடன் வசித்து வருகிறார்.

உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா ??

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள தனது வீட்டின் சமையலறையில் ஜாகீ மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். கொச்சியில் இருக்கும் ஜாகீயின் நண்பர் கடந்த திங்களன்று அவரை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார்.

அந்த அழைப்பை நீண்ட நேரமாக எடுக்காததால் சந்தேகமடைந்த நண்பர், ஜாகீயின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் மருத்துவர் ஒருவரை தொடர்பு கொண்டு ஜாகீ வீட்டுக்கு செல்லக் கேட்டுள்ளார்.

இதையடுத்து அந்த மருத்துவர் ஜாகீயின் வீட்டுக்குச் சென்று பார்த்த போது, வீட்டுக் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, பெரூர்கடா காவல்நிலையத்துக்கு அவர் தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ், வீட்டினுள் சமையலறையில் ஜாகீ இறந்துகிடந்ததைப் பார்த்துள்ளனர். இதையடுத்து அங்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தினர்.

போலீசார் தகவலின் படி, திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் ஜாகி தனது வீட்டின் கிச்சனில் பிணமாக கிடந்தது கண்டறியப்பட்டது. அப்போது அவரது தாயார் கிரேஸி அந்த இடத்தில் இல்லை. அவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பது போன்று தெரிவதால், அவரால் எதையுமே சொல்ல முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கை, விசாரணைக்குப் பின்னரே இதுகொலையா தற்கொலையா என்பதை உறுதியாகச் சொல்லமுடியும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Celebrity chef at kerala jagee john found dead in her house

Next Story
மேடையில் பாடிய அஜித் மகள் அனோஷ்கா – தல ரசிகர்கள் சும்மா இருப்பாங்களா!! (வீடியோ)ajith daughter anoushka singing video - அஜித் மகள் மேடையில் பாடிய பாடல் என்ன? - வைரலாகும் வீடியோ
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com