கடந்த இரண்டு தினங்களாக சென்னையை உலுக்கிக் கொண்டிருக்கும் சம்பவம் சென்னை அயனாவரத்தில் இருக்கும் `11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை. காது மற்றும் வாய் பேச முடியாத அந்த சிறுமியை 17 பேர் கொண்ட கும்பல் தொடர்ந்து 7 மாதங்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
உடல் நலம் பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்த போது தான், அவளுக்கு இப்படி ஒரு கொடுமை நேர்ந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த துயரத்தை கேட்டதுமே சிறுமியில் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் இதுவரை 17 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த 17 பேரையும் சிறுமியே அடையாளம் காட்டியது கொடுமையிலும் கொடுமை. கைது செய்யப்பட்ட்ர 17 பேரும் சிறுமிக்கு போது ஊசி செலுத்தியும், மயக்க மருந்து அளித்தும் இந்த கொடூரத்தில் ஈடுப்பட்டது அடுத்தடுத்த விசாரணையில் வெளி வந்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த காவல் துறையினர் 17 பேரை அழைத்து சென்றனர். அப்போது அவர்களை கண்டு ஆத்திரமடைந்த வழக்கறிஞர்கள் சிலர் அவர்களை கண்மூடித்தனமாக தாக்கினர். மேலும், இவர்களுக்காக எந்த ஒரு வழக்கறிஞரும் ஆஜராக மாட்டார்கள் என்றும் தெரிவித்திருந்தனர்.
சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்கள் பலரும் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
நடிகை வரலட்சுமி, இந்த அவமானத்திலாவது தற்கொலை செய்து கொள்ளுங்கள் என்று காட்டமாக கூறியுள்ளார்.
நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பது ” 12 வயது குழந்தையில் தாயாக இதை கற்பனை செய்து பார்க்கவே என் மனம் பதறுகிறது” என்று கூறியுள்ளார்.
நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில்
நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ட்விட்டரில் பதிவிட்டுருப்பது.
”கற்பழிப்பு வழக்கில் ஈடுபட்ட அனைவருக்கும் கடுமையான மற்றும் விரைவான தண்டனை தேவை”
நடிகர் விஷால் "பாலியல் பலாத்காரத்திற்கு மரண தண்டனை எனும் சட்டம் கொண்டு வர இன்னும் எத்தனை பேரை இழக்க வேண்டும். சென்னை சிறுமி சம்பவம் அறிந்து அதிர்ச்சியும், கோபமும் அடைந்தேன்" என தெரிவித்துள்ளார்.