Advertisment

கத்தரி போட நினைத்தும் முடியவில்லை: சென்சார் அதிகாரிகளை வியக்க வைத்த கண்ணதாசன் பாடல்

இல்லற வாழ்க்கையை உணர்த்தும் பாடல்; கத்திரி போட நினைத்த சென்சார் அதிகாரிகள்; கண்ணதாசனின் சொல் திறமையால் வரிகளை நீக்க முடியாமல் அனுமதித்த பாடல் எது தெரியுமா?

author-image
WebDesk
Oct 29, 2023 22:20 IST
New Update
Kannadasan Early life

இல்லற வாழ்க்கையை உணர்த்தும் பாடல்; கத்திரி போட நினைத்த சென்சார் அதிகாரிகள்; கண்ணதாசனின் சொல் திறமையால் வரிகளை நீக்க முடியாமல் அனுமதித்த பாடல் எது தெரியுமா?

கல்யாண வீடுகளில் இன்றைக்கும் மணமகளை வரவேற்க ஒலிக்கும் பாடல் வரிகளை நீக்க சென்சார் அதிகாரிகள் நினைத்தும், கண்ணதாசனின் சொல்லாடலால் நீக்க முடியாமல் தவித்த பாடல் குறித்து இப்போது பார்ப்போம்.

Advertisment

பாசமலர் படம் என்றவுடன் சிவாஜி கணேசனின் தங்கை பாசமும், சாவித்திரியின் உருக்கமான நடிப்பும் அனைவருக்கும் ஞாபகம் வரும். கூடவே அந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்களை மனது அசைபோடும். இந்தப் பாசமலர் படத்தில் இடம்பெற்ற வாராயென் தோழி… வாராயோ பாடல், இன்றைக்கும் திருமண வீடுகளில் மணப்பெண்ணை வரவேற்க ஒலிப்பரப்பப்பட்டு வருகிறது.

ஆனால், இந்தப் பாடலைக் கேட்ட சென்சார் அதிகாரிகள், பாடல் வரிகளை நீக்க முடிவு செய்துள்ளனர். இருப்பினும் கண்ணதாசனின் வரிகளில் வியந்த அதிகாரிகள் பாடலுக்கு கத்திரி போடவில்லை என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக தென்றல் தமிழ் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், பாசமலர் படத்தில் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையில், தங்கையின் திருமண நிகழ்வில் பாடப்படும் பாடலாக வாராயென் தோழி பாடல் இடம்பெற்றது. இந்தப் பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார். கண்ணதாசன் இந்தப் பாடலை எழுதினார்.

மணப்பெண்ணின் தோழி குறும்புடன் இல்லற வாழ்க்கையை வெளிப்படுத்தும் பாடலாக இந்தப் பாடல் அமைந்தது. கண்ணதாசன் தனது வார்த்தை ஜாலம் மூலம் தாம்பத்ய வாழ்க்கையை இலைமறைகாயாக சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார்.

இருப்பினும் இந்தப் பாடலைக் கேட்ட சென்சார் அதிகாரிகள் பாடல் வரிகளில் கத்திரி போட நினைத்தனர். சென்சார் அதிகாரிகளில் ஒருவரான சாஸ்திரி, கவிஞர் கண்ணதாசனுக்கு போன் செய்து, பாடல் வரிகளின் பொருளை உணரும்போது, கட் பண்ண வேண்டும் எனத் தோன்றுகிறது. ஆனால், நீங்கள் சொல்லியிருக்கும் அழகை பார்க்கும்போது கொஞ்ச வேண்டும் என்று தோன்றுகிறது என்று கூறி, பாடல் வரிகளை கட் செய்யாமல் விட்டுவிட்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

#Sivaji Ganesan #Kannadasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment