CEO in the house song video : ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் சர்கார் படத்தின் சி.இ.ஓ இன் தி ஹவுஸ் பாடல் வீடியோ ரிலீஸ்.
Advertisment
கடந்த மாதம் தீபாவளிக்கு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியானது சர்கார் படம். இப்படத்தில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
CEO in the house song video : சி.இ.ஓ இன் தி ஹவுஸ் பாடல் வீடியோ
இப்படத்தில் இடம்பெற்றிருந்த இலவச பொருட்கள் திட்டங்கள் பற்றிய காட்சிகள் மிகப் பெரிய சர்ச்சைக்குள்ளானது. இந்த காட்சிகளுக்கு எதிராக அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதன் பின்னர் மீண்டும் தணிக்கை குழுவால் அந்த காட்சிகள் நீக்கப்பட்டு தற்போது திரையிடப்பட்டு வருகிறது.
Advertisment
Advertisements
சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சி.இ.ஓ இன் தி ஹவுஸ் பாடல் வீடியோ வெளியிடப்பட்டது. பாடலாசிரியர் விவேக் வரிகளில் இப்பாடலை நகுல் அப்யங்கர் மற்றும் ராப் பாடகர் பிளேஸ் பாடியுள்ளனர். இதுவரை இந்த பாடலை 4 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். சுமார் 70 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.