பைக்-ல் இருந்து விழுந்த நடிகை… சன் டிவி டாப் டி.ஆர்.பி சீரியலுக்கு வந்த சோதனை!

Sun Tv’s kayal serial actress chaitra reddy got bike accident during shooting Tamil News: ‘கயல்’ சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி, ஷூட்டிங் போது அடிபட்டதாகவும், அவரின் பைக்கில் இருந்து கீழே விழுந்ததாகவும் தனது இன்ஸ்டா பதிவில் தெரிவித்துள்ளார்.

chaitra reddy Tamil News: kayal serial actress chaitra got bike accident

Chaitra Reddy Tamil News: விஜய் டிவி-யில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் அறிமுகமானவர் நடிகை சைத்ரா ரெட்டி. எனினும், இவர் அதிகம் பிரபலமானது ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய ‘யாரடி நீ மோகினி’ சீரியல் மூலம் தான். இந்த சீரியலில் ஸ்வேதா கேரக்டரில் வில்லியாக நடித்து மிரட்டி இருந்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

பெங்களூருவை சேர்ந்த சைத்ரா சீரியலில் அவர் அணியும் உடை மற்றும் ஸ்டைலுக்கேன தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். ஷூட்டிங் இல்லாத நேரங்களில் போட்டோஷூட் எடுத்து தனது இன்ஸ்டாவில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். சைத்ரா தற்போது சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், சைத்ராவுக்கு கயல் சீரியல் ஷூட்டிங் போது அடிபட்டதாகவும், அவரின் பைக்கில் இருந்து கீழே விழுந்ததாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால், அவர் தொடர்ந்து ஷூட்டிங்கில் கலந்து கொள்வாரா என்பதில் கேள்வியெழும்பியுள்ளது. சன் டிவியின் கயல் சீரியல் தற்போது டி.ஆர்.பி-யில் டாப்பில் இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chaitra reddy tamil news kayal serial actress chaitra got bike accident

Next Story
இது வெடிக்கிற திரியா ..? டிரைலர் எப்படி?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express