Chaitra Reddy Tamil News: சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களுள் ஒன்றாக "கயல்" சீரியல் உள்ளது. கடந்தாண்டு அக்டோபர் முதல் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் சில மாதங்களாகவே டிஆர்பியில் டாப் - 5 இடத்தை பிடித்து வருகிறது. மேலும், கடந்த சில வாரங்களாக முன்னணி சீரியல்களை முந்திக்கொண்டு முதலிடத்தை பிடித்து வருகிறது. இதற்கு காரணம் விறுவிறுப்பான கதையும், கயலின் இயல்பான நடிப்பும் என்றால் மிகையாகாது.
கயல் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய எப்படி அனு தினமும் போராடுகிறாள் என்பதே இந்த சீரியலின் மையக்கதை. கயல் ரோலில் நடிகை சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார். அவரது அமைதியான காதலன் எழிலரசனாக ராஜா ராணி புகழ் சஞ்சீவ் கார்த்திக் நடிக்கிறார்.
நடிகை சைத்ரா ரெட்டி, விஜய் டிவி-யில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் தான் முதன் முதலில் சின்னத்திரையில் அறிமுகமானார். எனினும் அவர் அதிகம் பிரபலமானது என்னவோ ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய ‘யாரடி நீ மோகினி’ சீரியல் மூலம் தான். இந்த சீரியலில் 'ஸ்வேதா' எனும் வில்லி கேரக்டரில் அவர் நடித்து மிரட்டி இருப்பார். இதனால், அவருக்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
பெங்களூருவை சேர்ந்த சைத்ரா சீரியலில் அவர் அணியும் உடை மற்றும் ஸ்டைலுக்கேன தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். ஷூட்டிங் இல்லாத நேரங்களில் போட்டோஷூட் எடுத்து தனது இன்ஸ்டாவில் பதிவிடுவதை அவர் வழக்கமாக வைத்துள்ளார். மேலும், சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் முக்கிய விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில், சைத்ரா நடிகர் அஜித்தின் வலிமை படத்தில் லதா ரோலில் நடித்து இருந்தார். அவர் வரும் காட்சிகள் குறைவாக இருந்தாலும், அவரது நடிப்பிற்காக ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்களை பெற்றார். இந்த மகிழ்ச்சியான செய்தியை சைத்ரா சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு மேலும் வாழ்த்து மழை பொழிந்தனர்.
தற்போது சன் டிவி-யின் கயல் சீரியலில் கயலாகவே வாழ்ந்து வரும் சைத்ரா இந்த சீரியலுக்காக அவர் சம்பளமாக பெறும் தொகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சைத்ரா ரெட்டி நாள் ஒன்றுக்கு 25,000 ரூபாய் சம்பளமாக பெறுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சீரியலிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை இவர்தான் என்றும் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.