Advertisment

Tamil Movie Review: பாராட்டுகளைப் பெற்று வரும் பரத்தின் ‘காளிதாஸ்’!

This Week Movie Release : ஜெய்யின் ’கேப்மாரி’ ரொமாண்டிக் காமெடி படமாகவும், பரத்தின் ’காளிதாஸ்’ க்ரைம் த்ரில்லர் படமாகவும் உருவாகியிருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
December release 2019

December release 2019

Tamil Movie Release: இந்த ஆண்டு நிறைவு பெற இன்னும் சில நாட்களே உள்ளன. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இதுவரை 200-க்கும் கீழான படங்களே வெளியாகியுள்ளன. தமிழ் சினிமா 2019-ம் ஆண்டு டபுள் சென்சுரி அடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்நிலையில் காளிதாஸ், சாம்பியன், கேப்மாரி, கருதுக்களை பதிவு செய், மெரினா புரட்சி ஆகியப் படங்கள் இந்த வாரம் ரிலீஸ் ஆகியிருக்கின்றன. இதில் ஜெய்யின் ’கேப்மாரி’ ரொமாண்டிக் காமெடி படமாகவும், பரத்தின் ’காளிதாஸ்’ க்ரைம் த்ரில்லர் படமாகவும் உருவாகியிருக்கிறது. அதோடு நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் ‘மெரீனா புரட்சியும்’ ஓரளவுக்கு எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளது.

Advertisment

குழந்தைகள் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக, முதன்முறையாக திருச்சியில் ஒருவர் கைது...

Live Blog

December 13 Tamil Movie Release

இந்தவாரம் ரிலீஸாகும் தமிழ் படங்கள் பற்றிய செய்திகள், கருத்துகள், விமர்சனங்கள் ஆகியவற்றை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.



























Highlights

    15:33 (IST)13 Dec 2019

    ரூபா மஞ்சரி வாழ்த்து

    பரத், சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன் ஆகியோரின் நடிப்பில் வெளியாகியுள்ள ‘களிதாஸ்’ படத்திற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் நடிகை ரூபா மஞ்சரி

    15:08 (IST)13 Dec 2019

    இயக்குநர் அஜய் ஞானமுத்து வாழ்த்து

    பரத்தின் காளிதாஸ் படக்குழுவினருக்கு, இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

    14:52 (IST)13 Dec 2019

    பரத்துக்கு உண்மையான கம்பேக்

    13:47 (IST)13 Dec 2019

    சிறப்பான த்ரில்லர்

    ’காளிதாஸ்’ சிறப்பான த்ரில்லர் படம் என்று இந்தப் பயனர் கூறியுள்ளார். 

    12:54 (IST)13 Dec 2019

    நடிகர் சாந்தனு பாக்யராஜ் வாழ்த்து

    காளிதாஸ் படக்குழுவினரை நடிகர் சாந்தனு பாக்யராஜ் வாழ்த்தியுள்ளார். 

    12:17 (IST)13 Dec 2019

    கார்த்திக் சுப்பராஜ் வாழ்த்து

    காளிதாஸ் படத்துக்கு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

    11:38 (IST)13 Dec 2019

    சுசீந்திரனின் சாம்பியன்

    விளையாட்டு சம்பந்தமான படங்களை தொடர்ந்து இயக்கும் இயக்குநர் சுசீந்திரன் தற்போது, ‘;சாம்பியன்’ படத்தை இயக்கியுள்ளார். 

    11:13 (IST)13 Dec 2019

    எஸ்.ஏ.சி-யின் 70-வது படம்

    இயக்குநர் எஸ்.ஏ.சந்திர சேகர் தனது 70-வது படமாக கேப்மாரி படத்தை இயக்கியுள்ளார். ஜெய் நடித்துள்ள அப்படம் இன்று வெளியாகியுள்ளது. 

    10:47 (IST)13 Dec 2019

    பிரபுதேவா வாழ்த்து

    காளிதாஸ் பட ட்ரைலரை பார்த்ததாகவும், மிகவும் சிறப்பாக இருந்ததாகவும் குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் நடிகர் பிரபு தேவா

    10:28 (IST)13 Dec 2019

    காளிதாஸ்: நல்ல கதையை தேர்வு செய்த பரத்

    நடிகர் பரத் மீண்டும் ஓர் நல்ல படத்தில் நடித்திருப்பதாக இந்த பயனர் தெரிவித்திருக்கிறார். 

    10:08 (IST)13 Dec 2019

    காளிதாஸ் பட பாடல்

    காளிதாஸ் படத்தில் இசையமைப்பாளர் விஷால் சந்திர சேகரின் இசையில் கர்நாடக இசைப் பாடகி, சுதா ரகுநாதன் பாடிய பாடல் 

    10:02 (IST)13 Dec 2019

    இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்கள்

    இந்த வாரம் பரத்தின் காளிதாஸ், சுசீந்திரனின் சாம்பியன், ஜெய்யின் கேப்மாரி, கருதுக்களை பதிவு செய், மெரினா புரட்சி ஆகியப் படங்கள் ரிலீஸ் ஆகியிருக்கின்றன. 

    கார்த்தியின் ’தம்பி’ மற்றும் சிவகார்த்திகேயனின் ’ஹீரோ’ ஆகிய படங்கள்  டிசம்பர் 20-ஆம் தேதி வெளியிடப்படுகின்றன. அதே நாளில் ஜீவாவின் ‘சீறு’, ஜி.வி.பிரகாஷின் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ ஆகியப் படங்களும் வெளியாவதாக தெரிகிறது. இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.
    Tamil Cinema
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment