”6 படம் புரொடக்‌ஷன்ல, 3 படம் ரிலீஸாகல” சீரியலுக்கு ரூட்டை மாற்றிய நடிகை!

Thazhampoo Serial: தான் நடித்த எந்த படமும் கை கொடுக்காத நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாக "தாழம்பூ "என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்துள்ளார்.

By: Published: October 3, 2019, 12:28:48 PM

Chandini Tamilarasan: இயக்குநர் பாக்யராஜ் இயக்கிய சித்து பிளஸ் 2 படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சாந்தினி தமிழரசன். இந்தப் படத்தில் சாந்தனு ஹீரோவாக நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, ”வில் அம்பு”, “நையப்புடை”, ”கவண்” உள்ளிட்டப் படங்களில் நடித்தார். கடந்தாண்டு இவருக்கு திருமணம் நடந்தது. அதன் பின்னரும் தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வந்தார் சாந்தினி. தற்போது, ”வணங்காமுடி, நான் அவளை சந்தித்த போது, கறிச்சோறு” உள்ளிட்ட 6 படங்களில் நடித்து வரும் சாந்தினிக்கு, 3 படங்களின் வெளியீடு தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது.

தான் நடித்த எந்த படமும் கை கொடுக்காத நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாக “தாழம்பூ “என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்துள்ளார். சீரியல் மூலம் ரசிகர்களின் மனதை எளிதாக வென்று, அவர்களிடம் நெருக்கமாகி விட்டு, பிறகு பெரிய திரைக்கு செல்வதை சிலர் ட்ரிக்ஸாக வைத்திருக்கிறார்கள். இன்னும் சிலர் பெரிய திரையில் போதுமான அளவு நடித்து முடித்தப் பிறகு, சீரியலுக்கு வருவார்கள். ஆனால் இவர்களால் எல்லா இடத்திலும் வெற்றி பெற முடியுமா என்றால் கேள்விக்குறி தான்.

ராதிகா, ரம்யா கிருஷ்ணன், தேவயானி உள்ளிட்ட நடிகைகள், சினிமா சீரியல் என்று இரண்டிலுமே தங்களது முத்திரையைப் பதித்திருக்கிறார்கள். அதே மாதிரி சாந்தினியும் வெற்றிபெற வாழ்த்துவோம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Entertainment News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Chandini tamilarasan acting vijay tv thazhampoo serial

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X